தேடுதல்

இலத்தீன் அமெரிக்க யூத மத குருமடத்தின் அதிபர், மற்றும் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை இலத்தீன் அமெரிக்க யூத மத குருமடத்தின் அதிபர், மற்றும் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை   (ANSA)

சமூக மாற்றத் திட்டத்திற்கான முன்மொழிவு

1962ஆம் ஆண்டில் அர்ஜெண்டினாவின் Buenos Aires நகரில் யூதமத குரு Marshall Meyer என்பவரின் பெயரில், யூத விழுமியங்கள், பாரம்பரியங்களுடன் அம்மத குருமாணவர்களை உருவாக்கவும், பயிற்றுவிக்கவும் இலத்தீன் அமெரிக்க யூத குருமடம் தொடங்கப்பட்டது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

உலகின் அவலங்களான அலட்சியம், வேதனை, அவநம்பிக்கை போன்றவற்றை எதிர்த்துப் போராடும் சமூக மாற்றத்திற்கான முன்மொழிவை திருத்தந்தையிடம் வழங்கினார் யூத மத குரு ஆரியல் ஸ்டோஃபன்மாக்கர் (Ariel Stofenmacher).

டிசம்பர் 02, வெள்ளி வத்திக்கானில், இலத்தீன் அமெரிக்க யூத மத குருமடத்தின் அதிபர், யூதமத குரு ஆரியல் ஸ்டோஃபன்மேக்கர் மற்றும் பிரதிநிதிகள் பலர் திருத்தந்தையை சந்தித்து, பொதுவான ஆன்மீகக் கண்ணோட்டத்தில் குருமாணவர்களின் பயிற்சியைப் புதுப்பிப்பதற்கான முன்மொழிவை வழங்கினர்.

பொதுவான ஆன்மீகக் கண்ணோட்டத்தில் இலத்தீன் அமெரிக்க யூத மத உருவாக்கத்தைப் புதுப்பித்து ஆன்மீகத்தலைவர்களை சமூக மாற்றத்தின் முகவர்களாக மாற்ற முயல்வதே இத்திட்டத்தின் நோக்கம் என்று தெரிவித்துள்ள யூதமத குரு Ariel Stofenmacher, கல்வி நிலையங்கள், ஆன்மீக மற்றும் இளையோர் இயக்கங்கள் வழியாக சமூக மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் திருஅவையுடன் ஒன்றிணைந்து உழைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 29, செவ்வாயன்று இறையியலாளர் ஏபிரகாம் ஜாசுவா ஹேஷலை (Abraham Joshua Heschel) நினைவுகூரும் விதமாக உரோம் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் இலத்தீன் அமெரிக்க யூதமத பிரதிநிதிகள் ஒன்றுகூடி நடத்திய மாநாட்டில், குருத்துவ பயிற்சி மாணவர்கள், கிரகோரியன் பல்கலைக் கழக மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இலத்தீன் அமெரிக்க யூதமத குருத்துவ பயிற்சி இல்லமானது,  யூத ஆன்மீகம் மற்றும் கல்வியை முன்னிலைப்படுத்தும் ஒரு சிறப்பான மையமாகும். 1962ஆம் ஆண்டில்  அர்ஜெண்டினாவின் Buenos Aires நகரில் யூதமத குரு மார்ஷல் மேயர் என்பவரின் பெயரில், யூத விழுமியங்கள் மற்றும் பாரம்பரியங்கள் கொண்டு அம்மத குருமாணவர்களை உருவாக்கவும், பயிற்றுவிக்கவும் தொடங்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 December 2022, 12:02