தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

கிறிஸ்துவே அனைத்து உண்மைகளையும் ஒன்றிணைக்கும் மையம்

மகிழ்ச்சி, அன்பு, மற்றும் நன்மைத்தனத்திற்கான ஒவ்வொருவரின் இதய விருப்பங்களையும் இயேசு நிறைவேற்றுகின்றார். - திருத்தந்தை

மெரினா ராஜ் – வத்திக்கான்

அனைத்து உண்மைகளையும் எதார்த்தங்களையும் ஒன்றிணைக்கும் மையமாகவும் எல்லாக் கேள்விகளுக்கான பதிலாகவும் கிறிஸ்து விளங்குகின்றார் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 19 இச்சனிக்கிழமை, கிறிஸ்துவே எல்லாவற்றின் மையமாக விளங்குகின்றார் என்பதனை எடுத்துரைக்கும் விதமாக குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை.

மகிழ்ச்சி, அன்பு, மற்றும் நன்மைத்தனத்திற்கான ஒவ்வொருவரின் இதய விருப்பங்களையும் இயேசு நிறைவேற்றுகின்றார் எனவும், மனித இதயங்களில் நிலையான இருப்பையும் தருகின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், கிறிஸ்துவே அனைத்து உண்மை மற்றும் எதார்த்தங்களின் மையம் எனவும், மனிதரின் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலாகவும் விளங்குகின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளார் அவர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 November 2022, 14:09