தேடுதல்

பிரான்ஸ் நாட்டு இளையோர் குழு சந்திப்பு (2022.08.06) பிரான்ஸ் நாட்டு இளையோர் குழு சந்திப்பு (2022.08.06)   (Vatican Media)

கடவுளின் அன்புக் கதையை உயிர்த்துடிப்புடன் வாழ அழைப்பு

திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில், அரபு மொழி மற்றும், எட்டு ஐரோப்பிய மொழிகளில் குறுஞ்செய்திகள் வெளியிடப்படுகின்றன

மேரி தெரேசா: வத்திக்கான்

கடவுளின் அன்புக் கதையை உயிர்த்துடிப்புடன் வாழ்வதற்கு நாம் ஒவ்வொருவரும் சிறப்பான முறையில் அழைக்கப்பட்டுள்ளோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆகஸ்ட் 12, இவ்வெள்ளியன்று கூறியுள்ளார்.

தனித்துவமிக்க, சுதந்திரமான, மற்றும் உயிர்த்துடிப்புள்ள நாம், கடவுளின் அன்புக் கதையை வாழவும், துணிச்சலும், உறுதியும்நிறைந்த தீர்மானங்களை எடுக்கவும், அன்புகூர்வதன் வியத்தகு சவாலை ஏற்கவும் அழைக்கப்பட்டுள்ளோம் என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள குறுஞ்செய்தியில் பதிவுசெய்துள்ளார்.

இஸ்பானியம், ஆங்கிலம், இத்தாலியம், போர்த்துக்கீசியம், பிரெஞ்சு, போலந்து, இலத்தீன், ஜெர்மன், அரபு என ஒன்பது மொழிகளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடும் குறுஞ்செய்தியை, 5 கோடியே இருபது இலட்சத்திற்கு மேற்பட்டோர் பார்வையிடுகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 August 2022, 14:00