தேடுதல்

Iqaluit பகுதிக்குச் செல்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ் Iqaluit பகுதிக்குச் செல்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ் 

கனடாவின் வடக்கேயுள்ள Iqaluit நகரம்

Iqaluit நகரம், ஆர்டிக் முனைக்குத் தெற்கே 300 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது

மேரி தெரேசா: வத்திக்கான்

கனடாவின் வடகோடியில் அமைந்துள்ள Iqaluit நகரம், ஆர்டிக் முனைக்குத் தெற்கே 300 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இது, Inuktitut இனத்தவரின் மொழியில் “எமது பூமி" என அழைக்கப்படும் நூனாவுட் (Nunavut) பகுதியின் தலைநகரமும், அப்பகுதியிலுள்ள ஒரே நகரமுமாகும். உலகிலுள்ள பெரிய தீவுகளில் ஒன்றான Baffin தீவிலுள்ள பெரிய விரிகுடா கரையில் Iqaluit நகரம் அமைந்துள்ளது. Inuit இனத்தவரின் மொழியில், “Iqaluit” என்றால் “மீன்” என்று பொருள். 1940களில் அமெரிக்க விமானத்தளம் கட்டப்பட்டபோது அங்கு வேலைசெய்வதற்காக Inuit இனத்தவரில் பலர் Koojesse Inlet என்ற இடத்திற்குச் சென்றனர். எனவே அச்சமயத்தில் இந்நகரம் சிறிய கிராமம் என்ற பொருளிலும் அழைக்கப்பட்டது. மேலும், Iqaluit நகரம், 1955ஆம் ஆண்டு முதல், 1987ஆம் ஆண்டு வரை, Frobisher விரிகுடா என்றே அழைக்கப்பட்டது. இப்பகுதியில் கனடாவின் Inuit பூர்வீக இனத்தின் பெருமளவான மக்கள், அதாவது ஏறத்தாழ 3,900 பேர் வாழ்கின்றனர். இச்சிறிய நகரத்தில் ஆறு பள்ளிகள், ஒரு கல்லூரி, 5 பராமரிப்பு மையங்கள், மூன்று எரிவாயு நிலையங்கள் ஆகியவை உள்ளன. Inuit இனத்தவருக்கு, இந்த விரிகுடாப் பகுதி, நூற்றாண்டுகளாக முக்கியமான மீன்பிடித் தளமாக இருந்துவருகிறது. 1999ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி, Iqaluit நகரம், அப்பகுதியின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. Inuit இனத்தவரால் ஆளப்பட்டுவரும் நூனாவுட் பகுதியில் வாழ்ந்துவரும் மக்களில் ஏறத்தாழ 80 விழுக்காட்டினர் அவ்வினத்தவரே.

Inuit இனத்தவர்
Inuit இனத்தவர்

Inuit இனத்தவர், கிரீன்லாந்து முதல் அலாஸ்கா கடற்கரைப் பகுதியிலும், சைபீரியாவின் Ciukci தீபகற்பம் பகுதியிலும் வாழ்ந்து வருகின்றனர். இரண்டாம் உலகப்போரின்போது 1942ஆம் ஆண்டில் Frobisher விரிகுடா பகுதியில் அமெரிக்க விமானத்தளம் அமைக்கப்பட்டபோது, மற்ற இனத்தவரும் அப்பகுதியில் குடியேறத் தொடங்கினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 July 2022, 15:16