தேடுதல்

வத்திக்கானின் புனித பேதுரு பசிலிக்காவில் அருள்பணித்துவ திருநிலைப்பாடு (2021.04.19) வத்திக்கானின் புனித பேதுரு பசிலிக்காவில் அருள்பணித்துவ திருநிலைப்பாடு (2021.04.19)   (Vatican Media)

அருள்பணியாளர்களின் தூய்மை வாழ்வுக்கென இறைவேண்டல்

1995ம் ஆண்டில் புனித திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்கள், அருள்பணியாளர்களின் தூய்மை வாழ்வுக்கென இறைவேண்டல் செய்யும் உலக நாளை உருவாக்கினார்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஜூன் 24, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட, அருள்பணியாளர்களின் தூய்மை வாழ்வுக்கென இறைவேண்டல் செய்யும் 27வது உலக நாளை மையப்படுத்தி, மற்றுமொரு டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பு அருள்பணியாளர்களே, விசுவாசிகளிடம் பொறுமையைக் கடைப்பிடியுங்கள், அவர்களை ஊக்கப்படுத்த எப்போதும் தயாராக இருங்கள், கடவுளின் மன்னிப்பு, மற்றும், இரக்கம் ஆகியவற்றுக்குச் சோர்வுறாத திருப்பணியாளர்களாக இருங்கள், கடினமான தீர்ப்புகளை ஒருபோதும் வெளியிடாதீர்கள், மாறாக, அன்புக்குரிய தந்தையராக இருங்கள் என்று, திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார்.

1995ம் ஆண்டில் புனித திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்கள் உருவாக்கிய, அருள்பணியாளர்களின் தூய்மைமிகு வாழ்வுக்கென இறைவேண்டல் செய்யும் உலக நாள், இயேசுவின் தூய்மைமிகு இதயம் பெருவிழாவன்று சிறப்பிக்கப்படுகிறது.   

அருள்பணியாளர்கள், தங்களின் அழைப்புபற்றி செபச்சூழலில் தியானிக்கவும், அவர்கள் தூய வாழ்வு வாழவும், கிறிஸ்துவுக்கும், திருஅவைக்கும் பிரமாணிக்கமாக இருக்கவும் அனைவரும் செபிக்கவேண்டும் என, இந்த உலக நாள் அழைப்புவிடுக்கின்றது.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 June 2022, 16:27