தேடுதல்

Casciaவில் புனித ரீத்தா திருநாள் Casciaவில் புனித ரீத்தா திருநாள்  (ANSA)

தேவையில் இருப்பவரை வரவேற்பவர், இயேசுவைக் கண்டுகொள்கிறார்

மன்னிப்பு, அமைதி, மற்றும், பிறரன்பின் அடையாளமாக இருப்பவர் புனித ரீத்தா என்றும், நம் மனிதப் பலவீனங்களை அப்புனிதரின் கரங்களில் அர்ப்பணிப்போம் - கர்தினால் பரோலின்

மேரி தெரேசா: வத்திக்கான்

தேவையில் இருப்பவரை வரவேற்பவர் யாராய் இருந்தாலும், அவர், பிறரன்புச் செயலை மட்டுமன்றி, கிறிஸ்தவ நம்பிக்கையை வழங்கும் பணியையும் ஆற்றுகின்றார், ஏனென்றால், அவர், தான் வரவேற்கும் சகோதரர் அல்லது சகோதரியில் இயேசுவைக் கண்டுகொள்கிறார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 23, இத்திங்களன்று வெளியிட்ட தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

உக்ரைனில் அமைதி

இத்தாலியின் Cascia நகரின் புனித ரீத்தா திருநாளை மே 22, இஞ்ஞாயிறன்று திருப்பலி நிறைவேற்றி சிறப்பித்த திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், உக்ரைனில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஆற்றக்கூடிய அனைத்தும் நடைபெறுமாறு புனித ரீத்தாவின பரிந்துரையை மன்றாடினார்.

நம்பிக்கை மற்றும், அமைதியின் பூமியாகிய  இத்தாலியின் உம்பிரியா மாநிலத்திலிருந்து உக்ரைனில் அமைதி நிலவ விண்ணப்பிக்கிறேன், அந்நாட்டில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மிக விரைவில் தொடங்கப்படவேண்டும், அவற்றின் வழியாக, அதிகம் தேவைப்படும் அமைதி கிட்டும் என்று கர்தினால் பரோலின் அவர்கள் கூறினார்.

Cascia நகரில் நிறைவேற்றிய திருப்பலி மறையுரையின்போது உலகின், குறிப்பாக, உக்ரைனின் இப்போதைய நிலவரத்தைக் குறிப்பிட்டு, இயலக்கூடாதவைகளின் புனிதர் மற்றும், நம்பிக்கையிழந்த மக்களுக்காக ஆதரித்துப் பேசுபவருமாகிய புனித ரீத்தா, உக்ரைனில் இடம்பெற்றுவரும் போருக்கு ஒரு தீர்வு காணப்பட உதவுவாராக என்று கூறினார்.

மன்னிப்பு, அமைதி, மற்றும், பிறரன்பின் அடையாளமாக இருப்பவர் புனித ரீத்தா என்றும், நம் மனிதப் பலவீனங்களை அப்புனிதரின் கரங்களில் அர்ப்பணிப்போம் என்றும் கேட்டுக்கொண்ட கர்தினால் பரோலின் அவர்கள், எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாக அமையாது என்றும் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 May 2022, 15:24