தேடுதல்

உலகளாவிய ஆராய்ச்சியாளர்கள் கத்தோலிக்கக் கல்வித் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் பிரதிநிதிகள் குழுவுடன் திருத்தந்தை உலகளாவிய ஆராய்ச்சியாளர்கள் கத்தோலிக்கக் கல்வித் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் பிரதிநிதிகள் குழுவுடன் திருத்தந்தை  

உலக ஆராய்ச்சியாளர்கள் பிரதிநிதிகள் குழுவுடன் திருத்தந்தை

கத்தோலிக்கக் கல்வியானது, மற்றவற்றுடன், இணைந்த வாழ்வு, சகோதர ஒற்றுமை மற்றும் அமைதி ஆகியவற்றைக் கற்பிப்பதன் வழியாக ஒரு சிறந்த உலகை உருவாக்க நம்மை அழைக்கின்றது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஏப்ரல் 20, இப்புதனன்று, உலகளாவிய ஆராய்ச்சியாளர்கள் கத்தோலிக்கக் கல்வித் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் பிரதிநிதிகள் குழுவைத் திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், அவர்களுக்கு உரை ஒன்றும் வழங்கினார்.

முதலில், புனிதமிகு இவ்விடத்திற்கு அவர்களை  வாழ்த்தி வரவேற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முழுமையான அர்ப்பணத்துடன் அவர்கள் திருஅவைக்கு ஆற்றிவரும் கல்விப் பணிகளைப் பாராட்டி மகிழ்ந்தார்.

கல்வியாளர்களாகிய நீங்கள், ஒவ்வொருவரின் இதயத்திலும் வாழும் உண்மை, நன்மை மற்றும் அழகுக்கான விருப்பத்தை வளர்க்க அழைக்கப்படுகிறீர்கள் என்றும், இதனால் அனைவரும் வாழ்க்கையை முழுமையாக நேசிக்கவும், கற்றுக்கொள்ளவும் நீங்கள் உதவ முடியும் என்றும் கூறினார்.

ஒரே மனிதக் குடும்பத்தில் சகோதர சகோதரிகளாக ஒன்றித்து வாழ்வதற்கு நம்மை படைத்த கடவுள் மீதான நம்பிக்கையின் ஒளியில், கல்வியாளர்களும் மாணவர்களும் கடவுளின் அன்பான குழந்தைகளாக சமமாக ஒருவரை ஒருவர் மதித்துப் போற்றவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இதன் அடிப்படையில், கத்தோலிக்கக் கல்வியானது, மற்றவறுடன், இணைந்த வாழ்வு, சகோதர ஒற்றுமை மற்றும் அமைதி ஆகியவற்றைக் கற்பிப்பதன் வழியாக ஒரு சிறந்த உலகை உருவாக்க நம்மை அர்ப்பணிக் அழைகின்றது என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

உங்கள் கல்வி நிறுவனங்களின் அனைத்து நிலைகளிலும், உங்கள் மாணவர்களின் இதயங்களில் இந்த மதிப்புகளை மேம்படுத்துவதற்கான பயனுள்ள வழிமுறைகளை உருவாக்க, உங்களின் இன்றைய உரையாடல் மற்றும் கலந்துரையாடல் உங்களுக்கு உதவும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அதேவேளையில், கத்தோலிக்கக் கல்வியும் ஒரு நற்செய்தி அறிவிப்புப் பணிதான் என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமது சமூகங்களைப் புதுப்பிப்பதற்கும், இன்றைய சவால்களை ஞானத்துடன் எதிர்கொள்ளும் நம்பிக்கையையும் வலிமையையும் கொடுப்பதற்கும் இந்நற்செய்தி அறிவிப்புப் பணி சாட்சியாக இருக்கிறது என்றும் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 April 2022, 14:20