தேடுதல்

பிலிப்பீன்சில் புயல் ஏற்படுத்திய பாதிப்பு பிலிப்பீன்சில் புயல் ஏற்படுத்திய பாதிப்பு   (AFP or licensors)

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு திருத்தந்தையின் உதவி

பெரும்புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், துயரங்கள் அனுபவித்து வரும் புலம்பெயர்ந்தோருக்கும் திருத்தந்தை ஆற்றியுள்ள உதவிகள் குறித்த திருப்பீடத்தின் அறிக்கை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

பிலிப்பீன்ஸ் நாட்டில் பெரும்புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், போலந்துக்கும் பெலாருஸ் நாட்டிற்குமிடையே துயரங்களை அனுபவித்து வரும் புலம்பெயர்ந்தோருக்கும் திருத்தந்தை ஆற்றியுள்ள உதவிகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது திருப்பீடத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான அவை.

பிலிப்பீன்சின் 11 பகுதிகளில் பெரும் சேதங்களையும், 80 லட்சம் மக்களின் இடம் பெயர்தலையும் உருவாக்கிய அண்மை RAI புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், முதல் தவணையாக ஒரு இலட்சம் டாலர்களை திருத்தந்தை வழங்குவதாக இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிலிப்பீன்சிலுள்ள திருப்பீடத் தூதரகம் வழியாக அனுப்பப்படும் இத்தொகை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறைமாவட்டங்கள் வழியாக வழங்கப்படுவதுடன், பல்வேறு வெளிநாட்டு தலத்திருஅவைகளின் உதவியும் தொடரும் என்கிறது ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான இத்திருப்பீட அவை.

மேலும், போலந்துக்கும் பெலாருசுகும் இடையே எல்லையில் தங்கவைக்கப்பட்டிருக்கும் புலம்பெயர்ந்தோருக்கு உதவும் நோக்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மேலும் ஒரு இலட்சம் டாலர்களை போலந்து காரித்தாஸ் பிறரன்பு அமைப்பு வழியாக வழங்குவதாகவும் இத்திருப்பீட அவை அறிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 January 2022, 14:53