தேடுதல்

பிரெஞ்ச் இராணுவக் கல்லறைத் தோட்டத்தில் செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் பிரெஞ்ச் இராணுவக் கல்லறைத் தோட்டத்தில் செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

இறந்த நம்பிக்கையாளர்கள் நமக்காகச் செபிக்கின்றனர்

மறுவாழ்வுக்கு ஏற்கனவே சென்றுள்ளவர்களுக்கும், இவ்வுலகில் பயணம் மேற்கொண்டுவரும் நமக்கும் இடையே, கிறிஸ்துவுக்குள், மறைபொருளான ஒரு தோழமை உள்ளது – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இறந்த நம்பிக்கையாளர்கள் அனைவரும் நமக்காகவும், நாம் அவர்களுக்காகவும், அவர்களோடும் இறைவேண்டல் செய்கின்றோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 2, இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் கூறியுள்ளார்.

மறுவாழ்வுக்கு ஏற்கனவே சென்றுள்ளவர்களுக்கும், இவ்வுலகில் பயணம் மேற்கொண்டுவரும் நமக்கும் இடையே, கிறிஸ்துவுக்குள், மறைபொருளான ஒரு தோழமை உள்ளது என்றும், இறந்த நம் அன்புறவுகள், நமக்காக இறைவனிடம் தொடர்ந்து பரிந்துபேசி வருகின்றனர் என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.

இறந்த அனைத்து நம்பிக்கையாளர்களையும் நினைவுகூரும் நவம்பர் 2, இச்செவ்வாயன்று, இறைவேண்டல், இறந்த அனைத்து நம்பிக்கையாளர்கள், புனிதர்களோடு ஒன்றிப்பு (#Prayer #FaithfulDeparted #CommunionOfSaints) என்ற ஹாஷ்டாக்குகளுடன், தன் டுவிட்டர் செய்தியில் இவ்வாறு திருத்தந்தை கூறியுள்ளார்.

மேலும், நவம்பர் 2, இச்செவ்வாயன்று உரோம் நகரிலுள்ள சிறிய பிரெஞ்ச் இராணுவக் கல்லறைத் தோட்டத்தில் திருப்பலி நிறைவேற்றி, வத்திக்கானுக்குத் திரும்பும் வழியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலுள்ள கல்லறைகளைத் தரிசித்து செபித்தார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 November 2021, 15:19