தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

இறைவேண்டல், வாழ்வுக்கு ஆக்சிஜன் போன்றது

வாரும் தூய ஆவியே, உற்றுக்கேட்பதற்கு எம் இதயங்களைத் திறந்தருளும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

2023ம் ஆண்டு அக்டோபரில் வத்திக்கானில் நடைபெறவிருக்கும் 16வது உலக ஆயர்கள் மாமன்றத் தயாரிப்புக்களின் முதல்நிலைப் பணிகள், உலக அளவில் தலத்திருஅவைகளில் துவங்கியிருக்கும்வேளை, இப்பணிகள் சிறப்பாய் நடைபெற தூய ஆவியாரின் உதவியை நாடுவோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 19, இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ள .குறுஞ்செய்திகளில் கேட்டுக்கொண்டுள்ளார்.

“இறைவேண்டல், வாழ்வுக்கு ஆக்சிஜன் போன்றது எனவும், இதுவே, எப்போதும் நம்மை முன்னோக்கி வழிநடத்திச் செல்லும் தூய ஆவியாரின் பிரசன்னத்தை நமக்கு உணர்த்துகின்றது” எனவும், தன் முதல் டுவிட்டர் செய்தியில் திருத்தந்தை கூறியுள்ளார்.

திருத்தந்தை பதிவுசெய்துள்ள இரண்டாவது டுவிட்டர் செய்தியில், “வாரும் தூய ஆவியே, உற்றுக்கேட்பதற்கு எம் இதயங்களைத் திறந்தருளும், புனிதத்துவத்தின் ஆவியானவரே, வாரும், இறைமக்களின் தூய நம்பிக்கையைப் புதுப்பித்தருளும், படைக்கும் ஆவியானவரே, இப்பூமியின் முகத்தைப் புதுப்பித்தருளும்” என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.

மாமன்றம், செவிசாய்க்கும் திருஅவை (#Synod #ListeningChurch) ஆகிய இரு ஹாஷ்டாக்குகளுடன் 16வது உலக ஆயர்கள் மாமன்றம் பற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒவ்வொரு நாளும் பதிவுசெய்யும் டுவிட்டர் செய்திகளை வாசிப்பதற்கு உதவியாக, வலைப்பக்க முகவரிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

https://www.synod.va/en/documents/adsumus.html

http://www.prayforthesynod.va

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 October 2021, 14:12