தேடுதல்

ஆப்ரிக்க சிறார் ஆப்ரிக்க சிறார் 

காங்கோவில் கைவிடப்பட்ட சிறாருக்கு திருத்தந்தையின் உதவி

காங்கோவில் கைவிடப்பட்ட சிறாருக்கு திருத்தந்தையின் உதவி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

காங்கோ குடியரசின் தலைநகர் Brazzavilleன் புறநகர் பகுதியில் கைவிடப்பட்ட சிறாருக்கென உருவாக்கபட்டுள்ள Foyer Nazareth இல்லத்திற்குத் தேவையான மருந்துப் பொருட்களை அனுப்பியியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அரிவாள் அணுச் சோகை என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சிறாருக்கு சிகிச்சைச் செய்வதற்குத் தேவையான மருந்துகள், காங்கோவில் அமைந்துள்ள திருப்பீடத் தூதரகம் வழியாக அனுப்பப்பட்டுள்ளன.

திருத்தந்தையின் இப்பிறரன்பு செயலுக்கு தங்கள் நன்றியை வெளியிட்டு, அவ்வில்லத்து சிறார் அனைவரும் கையெழுத்திட்டு, இல்ல பொறுப்பாளர், அருள்சகோதரி Elise Vouakouanitou அவர்கள் வழியாக கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளனர்.

மருந்துகள் கிடைக்காத இப்பகுதிக்கு, அப்படியே கிடைத்தாலும், விலை அதிகமாக இருக்கும் இந்த மருந்துகளை அனுப்பியமைக்காக நன்றி கூறும் இக்கடிதம், இச்சிறார்களால், வகுப்புகளில் பயன்படுத்தப்படும் காகிதத்தில், கைப்பட எழுதப்பட்டு திருத்தந்தைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தங்களுக்குத் தேவையான மருந்துகளுக்கு உதவவேண்டும் என, Foyer Nazareth இல்லத்தைச் சார்ந்த சிறார், தங்கள் கைப்பட, நேரடியாக திருத்தந்தைக்கு கடிதம் எழுதியதைத் தொடர்ந்து, திருத்தந்தையின் பிறரன்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாளரான, கர்தினால் Konrad Krajewski அவர்களால் அனுப்பப்பட்ட மருந்துகள்,  காங்கோவில் பணியாற்றும் திருப்பீடத்தூதர் வழியாக, இரண்டே மாதங்களில் அச்சிறாரை சென்றடைந்துள்ளன என்பது, குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 October 2021, 14:55