தேடுதல்

இறைவன் படைப்பின் அதிசயம் இறைவன் படைப்பின் அதிசயம் 

படைப்பின் காலத்தையொட்டிய திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

இறைவன் தன் படைப்பில் மகிமை நிறைந்தவராகவும், மறைபொருளாகவும் நிறைந்திருப்பதைக் கண்டுகொள்ள, மௌனமாக செவிமடுத்து, அது குறித்து ஆழ்ந்து தியானிக்க வேண்டியது அவசியம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இறைவன் தன் படைப்பில் மகிமை நிறைந்தவராகவும், அதேவேளை, மறைபொருளாகவும் நிறைந்திருக்கிறார் என்பதை நாம் கண்டுகொள்ள மௌனமாக செவிமடுத்து, அது குறித்து ஆழ்ந்து தியானிக்க வேண்டியது அவசியம் என இத்திங்களன்று தன் டுவிட்டர் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயற்கையின் மீது ஆட்சிபுரியும் இறைவன், அதில் மகிமையுடனும், மறைபொருளாகவும் நிறைந்திருக்கிறார், இதனை நாம் கண்டுகொள்ள வேண்டுமெனில், நாம் மௌனமாகவும், செவிமடுப்பவராகவும், ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடுபவராகவும் செயல்படவேண்டியது அவசியம் என உரைக்கிறது திருத்தந்தையின், செப்டம்பர் 6ம் தேதி, திங்கள்கிழமையின் டுவிட்டர் செய்தி.

செப்டம்பர் 1ம் தேதி முதல் அக்டோபர் 4ம் தேதி முடிய இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் படைப்பின் காலத்தையொட்டி திருத்தந்தையின் இந்த டுவிட்டர் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இத்திங்கள்கிழமையின் டுவிட்டர் செய்தியோடு இணைந்து 3391 டுவிட்டர்களை திருத்தந்தை வெளியிட்டுள்ளார். ஆங்கில மொழியில் மட்டும் திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகளை பின்பற்றுவோரின் எண்ணிக்கை ஏறக்குறைய 1 கோடியே 88 இலட்சமாக உள்ளது.

06 September 2021, 14:42