தேடுதல்

புனித பேதுரு பெருங்கோவிலும், வளாகமும் புனித பேதுரு பெருங்கோவிலும், வளாகமும் 

புனித பேதுரு பெருங்கோவில் மேய்ப்புப்பணி பற்றிய புதிய விதிமுறைகள்

ஆயிரம் ஆண்டு பழமையுடைய புனித பேதுரு பெருங்கோவிலின் மேய்ப்புப்பணி அமைப்பு, திருத்தந்தையால் நியமிக்கப்பட்ட அருள்பணியாளர்களைக் கொண்டிருக்கின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

புனித அகுஸ்தீன் விழாவான ஆகஸ்ட் 28ம் தேதி, இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலின் மேய்ப்புப்பணி பற்றிய புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளார்.

புனித பேதுரு பெருங்கோவிலில், குறிப்பாக, ஞாயிற்றுகிழமைகள் மற்றும், புனித நாள்களில் நடைபெறும் திருவழிபாடுகள், மேய்ப்புப்பணிகள் போன்றவற்றிற்கு, புத்தூக்கம் அளிக்கும் நோக்கத்தில், திருத்தந்தை வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள், இவ்வாண்டு, அக்டோபர் முதல் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் ஆண்டு பழமையுடைய புனித பேதுரு பெருங்கோவிலின் மேய்ப்புப்பணி அமைப்பு, திருத்தந்தையால் நியமிக்கப்பட்ட அருள்பணியாளர்களைக் கொண்டிருக்கின்றது. தற்போது இதில் 30 பேர் உள்ளனர்.

இந்த அமைப்பு 1053ம் ஆண்டில், திருத்தந்தை 9ம் லியோ அவர்களால் உருவாக்கப்பட்டது. திருத்தந்தை 4ம் யூஜின் அவர்கள் காலத்திலிருந்து, இந்த அமைப்பு, தன்னாட்சி பெற்றதாக அமைந்துள்ளது.

பல்வேறு துறவு சபைகளைச் சேர்ந்த துறவிகளால், இப்பெருங்கோவிலில் மேய்ப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 August 2021, 14:59