தேடுதல்

தூரின் கிறிஸ்தவ சபை ஆலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் தூரின் கிறிஸ்தவ சபை ஆலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்  

திருத்தந்தை: நற்செய்திக்கு மகிழ்வோடு சான்று பகருங்கள்

அனைத்து கிறிஸ்தவர்களும் முழு ஒன்றிப்பை நோக்கிய பயணத்தில் மிகத் தாராளத்தோடு செயல்படுமாறு திருத்தந்தை அழைப்பு

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மெத்தடிஸ்ட் மற்றும், வல்தேசி கிறிஸ்தவ சபையினர் நடத்துகின்ற பேரவையில் பங்குகொள்ளும் அனைத்துப் பிரதிநிதிகளுக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் நல்வாழ்த்துக்களை, தந்திச்செய்தி ஒன்றின் வழியாக அனுப்பியுள்ளார்.

அனைத்துக் கிறிஸ்தவர்களும் முழுஒன்றிப்பை நோக்கிய பயணத்தில் மிகத் தாராளத்தோடு செயல்படுமாறும், நற்செய்திக்கு மகிழ்வோடு சான்றுபகருமாறும், நீதி, அமைதி, மற்றும் ஒருமைப்பாடு ஆகிய விழுமியங்களை ஊக்குவிக்குமாறும் திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

இப்பிரதிநிதிகள், வல்தேசி சபை கிறிஸ்தவர்களுக்கும், கத்தோலிக்கருக்கும் இடையேயுள்ள உறவுகுறித்து சிந்திக்கவிருப்பதை குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இப்பிரதிநிதிகளுக்கு ஆண்டவரின் ஆசீரை இறைஞ்சியதோடு, இவர்கள், சமுதாயத்தில் நலிந்தவர்கள் மீது மிகுந்த அக்கறை காட்டுமாறும் கூறியுள்ளார்.

திருத்தந்தையின் இச்செய்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், வல்தேசி சபையினருக்கு அனுப்பியுள்ளார். இப்பேரவை, இத்தாலியில் ஆகஸ்ட் 22 இஞ்ஞாயிறு முதல், 25 புதன் வரை நடைபெறுகின்றது.  

வல்தேசி கிறிஸ்தவ சபை, 12ம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்டது.

21 August 2021, 14:57