தேடுதல்

பேரருட்திரு குய்தோ மரினி பேரருட்திரு குய்தோ மரினி 

திருவழிபாட்டு நிகழ்வுப் பொறுப்பாளர், ஆயராக நியமனம்

பேரருட்திரு குய்தோ மரினி அவர்கள், சட்டத்திலும், குடிமையியல் சட்டத்திலும் முனைவர் பட்டம் பெற்றுள்ளதுடன், சமூகத்தொடர்பின் உளவியல் என்ற துறையிலும் பட்டம் பெற்றுள்ளார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தையின் திருவழிபாட்டு நிகழ்வுகளுக்குப் பொறுப்பாளராக செயல்பட்டுவந்த பேரருட்திரு குய்தோ மரினி (Guido Marini) அவர்களை, வட இத்தாலியின் Tortona மறைமாவட்டத்தின் ஆயராக நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

2007ம் ஆண்டு முதல், திருத்தந்தையின் வழிபாட்டு நிகழ்வுகளுக்கு பொறுப்பாளராகச் செயல்பட்டுவரும் பேரருட்திரு மரினி அவர்கள், 2019ம் ஆண்டிலிருந்து பெருங்கோவில் பாப்பிறை இசைக்குழுவின் பொறுப்பாளராகவும் இருந்துவருகிறார்.

இத்தாலியின் ஜெனோவா பெருமறைமாவட்ட அருள்பணியாளரான இவர், திருஅவைச் சட்டத்திலும், குடிமையியல் சட்டத்திலும் முனைவர் பட்டம் பெற்றுள்ளதுடன், சமூகத்தொடர்பின் உளவியல் என்ற துறையிலும் பட்டம் பெற்றுள்ளார்.

கர்தினால்கள் Giovanni Canestri, Dionigi Tettamanzi, Tarcisio Bertone ஆகிய மூவருக்கு தனிப்பட்டச்  செயலராகப் பணியாற்றியுள்ள புதிய ஆயர் மரினி அவர்கள், வட இத்தாலியின் பல கல்வி நிலையங்களில் கற்பித்துள்ளதுடன், 2007 முதல், திருத்தந்தையின் திருவழிபாட்டு நிகழ்வுகளைக் கவனிக்கும் பொறுப்பில் இருந்துவந்துள்ளார்.

30 August 2021, 14:58