தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

இருள்சூழ்ந்த நேரங்களிலும் ஆண்டவர் வானதூதர்களை அனுப்புகிறார்

கனவுகள், நினைவு மற்றும், இறைவேண்டலின் பாதையில் புதிய பயணத்தைத் தொடர, முதியோருக்குத் தேவையான வல்லமையை ஆண்டவரின் நெருக்கம் வழங்குவதாக -திருத்தந்தை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஜூன் 22, இச்செவ்வாயன்று வெளியிடப்பட்ட, தாத்தாக்கள் பாட்டிகள் மற்றும், வயது முதிர்ந்தோர் முதல் உலக நாள் செய்தியை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் குறுஞ்செய்திகளை எழுதியுள்ளார்.

இந்த பெருந்தொற்று மாதங்களைப் போன்ற காரிருள் சூழ்ந்த நேரங்களில்கூட, நம் தனிமையில் ஆறுதலளிக்க, ஆண்டவர் தொடர்ந்து, வானதூதர்களை அனுப்புகிறார். “எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” (காண்க. மத்.28,20) என்பதையும் அவர் நமக்கு நினைவுபடுத்துகிறார் என்ற சொற்கள், திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

திருத்தந்தையின், தாத்தாக்கள் பாட்டிகள் மற்றும், வயது முதிர்ந்தோர் முதல் உலக நாள் செய்தியை வாசிப்பதற்கு உதவியாக, இணையபக்க முகவரியும், டுவிட்டர் செய்தியோடு கொடுக்கப்பட்டுள்ளது.  https://www.vatican.va/content/francesco/en/events/event.dir.html/content/vaticanevents/en/2021/6/22/messaggio-giornata-nonni.html

அன்பு தாத்தாக்களே, பாட்டிகளே, அனைவருக்கும், நம் மத்தியில் சக்தியிழந்து இருப்பவர்களுக்கும், கனவுகள், நினைவு மற்றும், இறைவேண்டலின் பாதையில் புதிய பயணத்தைத் தொடரத் தேவையான வல்லமையை ஆண்டவரின் நெருக்கம் வழங்குவதாக. என்ற சொற்கள், திருத்தந்தையின் இரண்டாவது டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன

22 June 2021, 15:24