தேடுதல்

ரெபிபியா சிறையின் 20 கைதிகளை சாந்தா மார்த்தா இல்லத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் ரெபிபியா சிறையின் 20 கைதிகளை சாந்தா மார்த்தா இல்லத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

நாம் ஒவ்வொருவரும் வாழவேண்டும் என்பது இறைஆவல்

உரோம் நகரின் ரெபிபியா சிறையின் 20 கைதிகளை, சாந்தா மார்த்தா இல்லத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

கடவுள் வாழ்கிறார், நாம் ஒவ்வொருவரும் வாழவேண்டும் என ஆவல் கொள்கிறார், என ஜூன் 21, திங்கள்கிழமையின் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'கடவுள் வாழ்கிறார், நாம் ஒவ்வொருவரும் வாழ ஆவல் கொள்கிறார். இவ்வுலகின் உண்மை அழகும் இளமையும் அவரே. அவர் தொடுவதெல்லாம், இளமையாகவும், புதியதாகவும், உயிரூட்டமுடையதாகவும், அர்த்தம் நிறைந்ததாகவும் மாறுகிறது', என திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி உரைக்கிறது.

மேலும், உரோம் நகரின் ரெபிபியா சிறையின் 20 கைதிகளை, ஜூன் 21, திங்கள் காலை உள்ளூர் நேரம் 8.45 மணியளவில் சாந்தா மார்த்தா இல்லத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ரெபிபியா சிறைத்துறை அதிகாரி, அச்சிறையின் ஆன்மீக அருள்பணியாளர், மற்றும் சில அதிகாரிகளுடன் வந்திருந்த 20 சிறைக்கைதிகளை, தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில் சந்தித்த திருத்தந்தை, சிறிது நேரத்தை அவர்களுடன் செலவிட்டு உரையாடினார்.

அதன் பின்னர், இச்சிறைக்கைதிகள், வத்திக்கான் அருங்காட்சியகம் சென்று பார்வையிடவும் அனுமதிக்கப்பட்டனர்.

இதே நாளில், நைஜீரியாவின் புதிய திருப்பீடத் தூதர் Paul Oga Adikwu அவர்கள், திருத்தந்தையை சந்தித்து தன் பணி நியமன சான்றிதழைகளை சமர்ப்பித்தார். அதேவேளை, திருப்பீடத்திற்கென, தன் பணியை நிறைவுச் செய்து திரும்பும் பிரிட்டன் தூதர் Sally Jane Axworthy அவர்களும், திருத்தந்தையைச் சந்தித்து விடைபெற்றார்.

21 June 2021, 14:50