தேடுதல்

திருத்தந்தையுடன், அமெரிக்க ஐக்கிய நாட்டின் வெளியுறவு அமைச்சர் Antony John Blinken திருத்தந்தையுடன், அமெரிக்க ஐக்கிய நாட்டின் வெளியுறவு அமைச்சர் Antony John Blinken  (ANSA)

திருத்தந்தையுடன் அமெரிக்க அரசுச்செயலர் சந்திப்பு

அமெரிக்க ஐக்கிய நாட்டின் வெளியுறவுத்துறைச் செயலர் Antony John Blinken அவர்களுக்கும், திருத்தந்தைக்கும் இடையே ஜூன் 28, திங்கள் காலையில் இடம்பெற்ற சந்திப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூன் 28, திங்கள்கிழமை காலையில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் அரசுச் செயலர் Antony John Blinken அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் வெளியுறவு அமைச்சர் Antony John Blinken அவர்களுக்கும் திருத்தந்தைக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பு குறித்து செய்தி வெளியிட்ட திருப்பீட செய்தித்துறைத் தலைவர் மத்தேயு புரூனி அவர்கள், 40 நிமிடங்கள் இடம்பெற்ற இச்சந்திப்பு, நல்லுறவுடன்கூடியச் சூழலில் இடம்பெற்றதாகவும், 2015ம் ஆண்டு, தான் அமெரிக்க ஐக்கிய நாட்டில் மேற்கொண்ட திருத்தூதுப்பயணத்தை நினைவுகூர்ந்த திருத்தந்தை, அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்களுக்கு தன் அன்பை வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

ஐரோப்பிய நாடுகளில், அரசியல் தொடர்புடைய முதல் பயணத்தை மேற்கொண்ட வெளியுறவு அமைச்சர் Blinken அவர்கள், இறுதியாக, இத்திங்கள் காலை திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும் சந்தித்து உரையாடினார்.

ஜூன் 22, கடந்த செவ்வாய்க்கிழமை, அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து ஜெர்மனிக்கு சென்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சர் Blinken அவர்கள், அந்நாட்டில், அரசுத்தலைவர் Angela Merkel அவர்களையும், பின்னர், பாரிசில், பிரெஞ்ச் அரசுத்தலைவர் Emmanuel Macron அவர்களையும், சந்தித்தபின், உரோம் நகர் வந்துள்ளார்.

மோதல்களால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள லிபியா நாட்டில், நிலைத்த அமைதியைக் கொண்டுவரும் நோக்கத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டபின், திங்கள் காலையில், திருத்தந்தையை சந்தித்து 40 நிமிடங்கள் கலந்துரையாடினார், அமெரிக்க அரசுச் செயலர் Blinken.

28 June 2021, 15:04