தேடுதல்

San Damaso வளாகத்தில் புதன் மறைக்கல்வியுரை San Damaso வளாகத்தில் புதன் மறைக்கல்வியுரை 

San Damaso வளாகத்தில் மீண்டும் புதன் மறைக்கல்வியுரை

வருகிற புதன்கிழமையன்று நடைபெறும் மறைக்கல்வியுரையில் கலந்துகொள்ள விரும்பும் விசுவாசிகள், புனித பேதுரு வளாகத்தின் Bronze வாயில் வழியாகச் செல்லலாம். இதற்கு நுழைவு அனுமதிச் சீட்டு தேவையில்லை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்தவர்கள், திடீரென எழுகின்ற தங்களின் சொந்த விருப்பங்களைப் பின்பற்றுவதில்லை, மாறாக, அன்புக்கு அழைப்பு விடுக்கும் இயேசுவின் குரலைப் பின்பற்றுகின்றனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 07, இவ்வெள்ளியன்று வெளியிட்ட, தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

புதன் மறைக்கல்வியுரை

மேலும், மே 12, வருகிற புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதன் மறைக்கல்வியுரை, மீண்டும், வத்திக்கானின் San Damaso வளாகத்தில், கோவிட்-19 விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறும் என்றும், இந்த நிகழ்வில் விசுவாசிகள் கலந்துகொள்ளலாம் என்றும், திருப்பீட தகவல் தொடர்பகம் அறிவித்துள்ளது.

வருகிற புதன்கிழமையன்று நடைபெறும் மறைக்கல்வியுரையில் கலந்துகொள்ள விரும்பும் விசுவாசிகள், புனித பேதுரு வளாகத்தின் Bronze வாயில் வழியாகச் செல்லலாம். இதற்கு நுழைவு அனுமதிச் சீட்டு தேவையில்லை. ஆயினும், விசுவாசிகள், கோவிட்-19 கட்டுப்பாட்டு விதிமுறைகளைக் கட்டாயமாகப் பின்பற்றவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில், கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக, 2020ம் ஆண்டு மார்ச் 11ம் தேதியிலிருந்து. திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரைகள், வத்திக்கானிலுள்ள திருத்தந்தையின் நூலகத்தில், விசுவாசிகளின் பங்கேற்பின்றி நடைபெற்றன.

பின்னர், அவை, 2020ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதியிலிருந்து, வத்திக்கானின் San Damaso வளாகத்தில், விசுவாசிகளின் பங்கேற்புடன் நடைபெற்றன பின்னர், மீண்டும், கடந்த ஆண்டு நவம்பர் 4ம் தேதியிலிருந்து திருத்தந்தையின் நூலகத்திலிருந்தே புதன் மறைக்கல்வியுரைகள் நடைபெறத் துவங்கின.

தற்போது, வருகிற வாரம், ஏப்ரல் 12ம் தேதியிலிருந்து, திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரைகள், வத்திக்கானின் San Damaso வளாகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

07 May 2021, 14:48