தேடுதல்

Vatican News
ஹாங்காங் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் - இயேசு சபை அருள்பணியாளர் Stephen Chow Sau-yan ஹாங்காங் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் - இயேசு சபை அருள்பணியாளர் Stephen Chow Sau-yan  

ஹாங்காங் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர்

துருக்கி அரசுத் தலைவருடன் தொலைபேசி உரையாடல், ஈரான் வெளியுறவு அமைச்சருடன் நேரடி சந்திப்பு என, திருத்தந்தையின் நடவடிக்கைகள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஹாங்காங் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக இயேசு சபை அருள்பணியாளர் Stephen Chow Sau-yan அவர்களை மே மாதம் 17ம் தேதி, இத்திங்களன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

1959ம் ஆண்டு ஹாங்காங்கில் பிறந்த இயேசு சபை அருள்பணி Stephen Chow Sau-yan அவர்கள், 2018ம் ஆண்டு, முதல் நாளிலிருந்து இயேசு சபையின் சீன மாநிலத் தலைவராகவும், 2020ம் ஆண்டிலிருந்து, ஹாங்காங் ஆண் துறவுசபைத் தலைவர்கள் அமைப்பின் துணைச் செயலராகவும் பணியாற்றி வந்துள்ளார்.

இதற்கிடையே, திங்கள் காலையில், திருப்பீடத்தின் பல்வேறு துறைகளைச் சார்ந்த தலைவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன்பின், ஈரானின் வெளியுறவு அமைச்சர் Mohammad Javad Zarif அவர்களையும் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

மேலும், துருக்கி அரசுத்தலைவர் Recep Tayyip Erdoğan அவர்களுக்கும், திருத்தந்தைக்கும் இடையே, இத்திங்களன்று, இத்தாலிய நேரம் காலை 9 மணிக்கு, தொலைபேசி உரையாடல் இடம்பெற்றதாக, திருப்பீடச் செய்தித்தொடர்பகம் அறிவித்துள்ளது.

17 May 2021, 15:11