தேடுதல்

Vatican News
புனிதராக உயர்த்தப்படவிருக்கும் அருளாளர் தேவசகாயம புனிதராக உயர்த்தப்படவிருக்கும் அருளாளர் தேவசகாயம 

எவ்வேளையிலும் இறைனைப் புகழமுடியும் எனக் காட்டும் புனிதர்கள்

தமிழகத்தின் அருளாளர் தேவசகாயம் உட்பட, ஏழு அருளாளர்களை புனிதர்களாக உயர்த்துவது குறித்து கர்தினால்களின் வாக்கெடுப்பு இடம்பெற்றதையொட்டி, திருத்தந்தையின் டுவிட்டர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

நல்ல நேரங்கள், துன்ப நேரங்கள் என அனைத்து வேளைகளிலும் நாம் இறைவனைப் போற்றிப் புகழமுடியும் என்பதை, புனிதர்கள் நமக்கு காட்டுகின்றனர் என, மே 3ம் தேதி, இத்திங்கள்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் எடுத்துரைத்துள்ளார்.

தமிழகத்தைச் சார்ந்த அருளாளர் தேவசகாயம் உட்பட, ஏழு அருளாளர்களை புனிதர்களாக உயர்த்துவது குறித்து கர்தினால்களின் வாக்கெடுப்பு மே 3ம் தேதி, இத்திங்கள்கிழமையன்று இடம்பெற்றதையொட்டி, இந்த டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எல்லா வேளைகளிலும் இறைவனைப் புகழ, புனிதர்கள், நமக்கு காண்பிக்கிறார்கள், ஏனெனில், இறைவன் நம்பிக்கைக்குரிய ஒரு நண்பர், மற்றும் ஒருபோதும் நம்மை கைவிடாதவர், என அதில் கூறியுள்ளார்.

மேலும், இத்திங்களன்று உலகில் சிறப்பிக்கப்பட்ட பத்திரிகை சுதந்திர தினம் குறித்து மற்றொரு டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பொதுநலனைக் கட்டியெழுப்பவும், அதனைப் பலப்படுத்தவும் நம்மால் இயன்ற அனைத்தையும், குறிப்பாக, சக்திநிரம்பிய தகவல் தொடர்புசாதனத்தை பயன்படுத்துவோம் என தன் டுவிட்டர் செய்தியில் அழைப்பு விடுக்கும் திருத்தந்தை, தகவல் தொடர்பை, அமைதியை உருவாக்கப் பயன்படுத்துவோம் என விண்ணப்பித்துள்ளார்.

03 May 2021, 15:00