தேடுதல்

Vatican News
வத்திக்கான் வானொலி நிலையம் வத்திக்கான் வானொலி நிலையம்  

திருத்தந்தை பிரான்சிஸ் வத்திக்கான் வானொலிக்கு வருகை

வானொலி என்ற அறிவியல் புதுமையைக் கண்டுபிடித்த மார்க்கோனி அவர்களால், வத்திக்கான் வானொலி வடிவமைக்கப்பட்டது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 24, வருகிற திங்கள்கிழமையன்று, சமூகத்தொடர்பு திருப்பீடத் துறையில் பணியாற்றும் குழுமத்தை, வத்திக்கான் வானொலி அமைந்திருக்கும் Palazzo Pio கட்டடத்தில் சந்திப்பார் என்று, திருப்பீட தகவல் தொடர்பகத்தின் இயக்குனர் மத்தேயோ புரூனி அவர்கள் அறிவித்துள்ளார்.

வத்திக்கான் வானொலி தொடங்கப்பட்டதன் 90ம் ஆண்டு நிறைவு, மற்றும், லொசர்வாத்தோரே ரொமானோ நாளிதழ் தொடங்கப்பட்டதன் 160ம் ஆண்டு நிறைவு, ஆகிய இரு நிகழ்வுகளை முன்னிட்டு, மே 24, வருகிற திங்கள் காலை 9 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Palazzo Pio கட்டடத்தில், அத்துறையினரைச் சந்திப்பார் என்று, புரூனி அவர்கள் அறிவித்துள்ளார்.

வானொலி என்ற அறிவியல் புதுமையைக் கண்டுபிடித்த மார்க்கோனி அவர்களால், வத்திக்கான் வானொலி, வடிவமைக்கப்பட்டு, திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களால், 1931ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி தொடங்கிவைக்கப்பட்டது. 24 மணி நேரமும் தன் ஒலிபரப்பை நடத்திவரும் வத்திக்கான் வானொலியில், அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றுகின்றனர்

18 May 2021, 15:20