தேடுதல்

Vatican News
இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜோ மத்தரெல்லா இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜோ மத்தரெல்லா   (Vatican Media)

தலைமைப்பணியின் துவக்க நாளுக்கு நல்வாழ்த்து

இன்றைய துயர்நிறைந்த சூழல்களை எதிர்கொள்வதற்கு, உடன்பிறந்த உணர்வுடன் பணியாற்ற திருத்தந்தை அழைப்புவிடுத்து வருகிறார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

2013ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி, புனித யோசேப்பு பெருவிழாவன்று, உலகளாவிய கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப்பணிக்கு திருப்பொழிவு செய்யப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜோ மத்தரெல்லா அவர்கள், நல்வாழ்த்து செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்று, உலகெங்கும் ஏராளமான மக்களைத் தொடர்ந்து பாதித்துவரும்வேளை, இன்றைய துயர்நிறைந்த சூழல்களை எதிர்கொள்வதற்கு, உடன்பிறந்த உணர்வுடன் பணியாற்ற திருத்தந்தை அழைப்புவிடுத்து வருவதையும், பொறுப்புள்ள குடிமக்களாகச் செயல்பட வலியுறுத்தி வருவதையும் குறிப்பிட்டுள்ளார், அரசுத்தலைவர் மத்தரெல்லா.

பெருந்தொற்றுக்குப் பலியானவர்கள் நினைவு

மேலும், இத்தாலியில் “கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பலியானவர்கள் இறைவேண்டல் நாள்”, மார்ச் 18, இவ்வியாழனன்று, கடைப்பிடிக்கப்பட்டது. இந்நாளன்று தன் டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றையும் திருத்தந்தை வெளியிட்டிருந்தார்.

“இத்தாலியில், கோவிட்-19 பெருந்தொற்றுக்கும், அந்நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தவேளை அதனால் தாக்கப்பட்டும், ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர், அவர்களுக்காகச் செபிப்போம், ஆண்டவர் அவர்கள் அனைவருக்கும் நிறையமைதியை அளிப்பாராக, மற்றும், அவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலளிப்பாராக”

என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில் இடம்பெற்றிருந்தன.

19 March 2021, 12:42