தேடுதல்

Vatican News
Sampdoria கால்பந்து விளையாட்டு கழகத்தினர் சந்திப்பு Sampdoria கால்பந்து விளையாட்டு கழகத்தினர் சந்திப்பு  (Vatican Media)

நம் மனமாற்றத்தை வெளிப்படுத்தும் அம்சங்கள்

நோன்பு இருத்தல், இறை வேண்டல் மற்றும், தர்மம் செய்தல் ஆகியவை, நம் மனமாற்றத்தை வெளிப்படுத்த உதவுகின்றன – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பிப்ரவரி 17, இப்புதனன்று துவங்கியிருக்கும் தவக்காலத்தில் நம் மனமாற்றத்தை வெளிப்படுத்தும் அம்சங்கள் என்ன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 19, இவ்வெள்ளியன்று, தன் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

“இயேசுவால் போதிக்கப்பட்ட (காண்க. மத்.6:1-18), நோன்பு இருத்தல், இறை வேண்டல் மற்றும், தர்மம் செய்தல் ஆகியவை, நாம் மனமாற்றம் அடையவும், அதை வெளிப்படுத்தவும் உதவுகின்றன” என்ற சொற்களை, தவம் (#Lent) என்ற ஹாஷ்டாக்குடன்,

திருத்தந்தை, தன் டுவிட்டர் பக்கத்தில், இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ளார். 

மேலும், இவ்வெள்ளியன்று, இத்தாலியின் Sampdoria கால்பந்து விளையாட்டு கழகத்தின் பொறுப்பாளர்கள் மற்றும், விளையாட்டு வீரர்கள் ஐம்பது பேரை, திருப்பீடத்தின் கிளமெந்தினா அறையில் சந்தித்து, அப்போதைக்கு தன் மனத்தில் எழுந்த எண்ணங்களை அவர்களோடு பகிர்ந்துகொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்னும், இவ்வெள்ளியன்று, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர் கர்தினால் லூயிஸ் அநதோனியோ தாக்லே அவர்களையும், உலகளாவிய கத்தோலிக்க அருங்கொடை இயக்கத்தின் நெறியாளர் Jean-Luc Moens அவர்களையும், திருத்தந்தை வத்திக்கானில் தனித்தனியே சந்தித்து கலந்துரையாடினார்.

19 February 2021, 13:54