தேடுதல்

Vatican News
எரிக்கோ அருகே மீண்டும் திறக்கப்பட்ட ஒரு புனித தலத்தை அர்ச்சிக்கும் அருள்பணி Francesco Patton எரிக்கோ அருகே மீண்டும் திறக்கப்பட்ட ஒரு புனித தலத்தை அர்ச்சிக்கும் அருள்பணி Francesco Patton 

புனித பூமியின் பாதுகாவலர்களுக்கு திருத்தந்தையின் செய்தி

புனித பூமியின் பாதுகாவலர்கள் உருவாக்கப்பட்டதன் 600ம் ஆண்டு நிறைவு, பிப்ரவரி 14, வருகிற ஞாயிறன்று சிறப்பிக்கப்படுகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை 5ம் மார்ட்டின் அவர்கள், புனித பூமியின் பாதுகாவலர்களாக, பிரான்சிஸ்கன் சபையினரை உருவாக்கியதன் 600ம் ஆண்டு நிறைவுக்கென்று, தன் நல்வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித பூமியின் தற்போதைய பாதுகாவலரான, பிரான்சிஸ்கன் சபையின் அருள்பணி  Francesco Patton அவர்களுக்கு, மடல் ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை, பிப்ரவரி 14, வருகிற ஞாயிறன்று இந்த 600ம் ஆண்டு நிறைவு சிறப்பிக்கப்படுவதைக் குறிப்பிட்டுள்ளார்.

இச்சபையினர் ஆற்றிவரும் விலைமதிப்பில்லாத பணிகளைப் பாராட்டியுள்ள திருத்தந்தை, இவர்களின் பணி, உடன்பிறந்த உணர்வை அதிகமதிகமாய் விதைப்பதாக மாறும் என்று தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இயேசு வாழ்ந்த பூமியில், திருஅவையின் ஆன்மீக மற்றும், பிறரன்பு உறவுகளை வளர்ப்பதிலும், அதற்கு ஆதரவளித்து ஊக்கமூட்டுவதிலும், கடந்த நூற்றாண்டுகளில் ஆற்றிவந்த பணிகள், இக்காலத்திற்கும் பொருந்துவதாய் உள்ளன என்று கூறியுள்ள திருத்தந்தை, புனித பூமியின் பாதுகாவலர்கள் அனைவருக்கும் தன் ஆசீரை வழங்கியுள்ளதோடு, தனக்காகச் செபிக்க மறக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

12 February 2021, 15:44