தேடுதல்

Vatican News
CNS எனும் கத்தோலிக்க செய்தி நிறுவனத்தினருடன் திருத்தந்தை CNS எனும் கத்தோலிக்க செய்தி நிறுவனத்தினருடன் திருத்தந்தை  (ANSA)

இறையன்பிற்கு சான்று பகர்தலில் கத்தோலிக்க செய்தி நிறுவனம்

தனிமனிதர்களுக்கும் சமுதாயங்களுக்கும் இடையேயான கலந்துரையாடல்களையும், தகவல் பரிமாற்றங்களையும் சமூகத்தொடர்பாளர்கள் ஊக்குவிக்க வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

CNS எனும் கத்தோலிக்க செய்தி நிறுவனத்தின் அதிகாரிகள், மற்றும், பணியாளர் பிரதிநிதிகளை இத்திங்கள்கிழமை காலையில் திருப்பீடத்தில் சந்தித்து தன் வாழ்த்துக்களை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

CNS கத்தோலிக்க செய்தி நிறுவனம் உருவாக்கப்பட்டதன் நூறாம் ஆண்டு நிறைவையொட்டி, ஆங்கிலம் பேசும் மக்களுக்கு அவர்கள் கடந்த நூறாண்டுகளாக ஆற்றிவரும் பணிகள் பற்றி குறிப்பிட்டு தன் பாராட்டுக்களை தெரிவித்த திருத்தந்தை, நற்செய்தியை அறிவிப்பதில் திருஅவையின் பணிகள், இறையன்பிற்கு சான்று பகர்தல், போன்றவைகளில் இந்த CNS செய்தி நிறுவனம் ஆற்றிவரும் மதிப்புமிக்க பணிகளுக்கு நன்றியுரைப்பதாகவும் தெரிவித்தார்.

தவறான தகவல்களும், புனையப்பட்ட செய்திகளும் பரவிவரும் இன்றைய காலக்கட்டத்தில், உண்மையை அப்படியே அதன் இயல்பு நிலையோடு வழங்கி வரும் CNS கத்தோலிக்க செய்தி நிறுவனம், தனிமனிதர்களுக்கும் சமுதாயங்களுக்கும் இடையே கலந்துரையாடல்களையும், தகவல் பரிமாற்றங்களையும் தொடர்ந்து ஊக்குவிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தீயவைகளிலிருந்து நன்மைகளை பிரித்து அடையாளம் காணவும், உண்மை நிலையை முன்வைத்து அதன் அடிப்படையில் தெளிவான தீர்வுகளைப் பெறவும், நீதிக்கும், சமுதாய இணக்கத்திற்கும், பொது இல்லமாகிய இவ்வுலகை மதித்து செயல்படவும், அனைத்து மக்களுக்கும், குறிப்பாக, இளையோருக்கு உதவுவதாக. சமூகத்தொடர்பாளர்கள் செயல்பட வேண்டும் எனற விண்ணப்பத்தையும் முன்வைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

01 February 2021, 14:30