தேடுதல்

Vatican News
புனிதர் Faustina Kowalska ஆலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் (30.07.2016) புனிதர் Faustina Kowalska ஆலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் (30.07.2016) 

பிறரன்பு சேவைகளை தொடர்ந்து மகிழ்வுடன் எடுத்துச் செல்லுங்கள்

திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அவர்கள், நம் இதயங்களை விசுவாசத்தில் திறக்கவும், நம் நம்பிக்கையை இயேசுவில் வைக்கவும் ஊக்கமளித்தவர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

போலந்து நாட்டின் Plock நகரின் இறை இரக்க திருத்தலம் குறித்து இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Plock திருத்தலம் குறித்து, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த போலந்து திருப்பயணிகளை நோக்கி, ஞாயிற்றுக்கிழமை நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்விடத்தில்தான் 90 ஆண்டுகளுக்கு முன்னர் அருள்சகோதரி Faustina Kowalska அவர்களுக்கு இறைவன் காட்சியளித்து சிறப்பு செய்தி ஒன்றை வழங்கியதையும் நினைவூட்டினார்.

புனிதர் Faustina Kowalska அவர்களுக்கு இறைவன் காட்சியளித்தது குறித்து உலகின் கவனத்திற்கு கொண்டுவர உதவியவர் முன்னாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அவர்களே என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்திருத்தந்தையே, நம் இதயங்களை விசுவாசத்தில் திறக்கவும், நம் நம்பிக்கையை இயேசுவில் வைக்கவும் ஊக்கமளித்தார் என்றார்.

மேலும், உரோம் நகரின் San Giovanni dei Fiorentini என்ற பங்குத்தளத்திலிருந்து இயங்கும் 'தலித்தா கும்' என்ற அமைப்பின் அங்கத்தினர்களுக்கு தன் வாழ்த்துக்களை வெளியிட்ட திருத்தந்தை, அவர்கள் தங்கள் பிறரன்பு சேவைகளை தொடர்ந்து மகிழ்வுடன் எடுத்துச் செல்லுமாறு அழைப்பு விடுத்தார்.

21 February 2021, 13:10