தேடுதல்

Vatican News
Dibrugarh பேராலயமும் புதிய ஆயரும் Dibrugarh பேராலயமும் புதிய ஆயரும்  

Dibrugarh மறைமாவட்ட ஆயராக, வாரிசுரிமை ஆயர் நியமனம்

ஆயர் Joseph Aind அவர்கள் ஓய்வு பெற்றுள்ளதைத் தொடர்ந்து, புதிய ஆயராக Albert Hemrom அவர்களை, Dibrugarh மறைமாவட்டத்தின் ஆயராக நியமித்துள்ளார் திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

வடகிழக்கு இந்தியாவின் அஸ்ஸாம் மாநில Dibrugarh மறைமாவட்ட ஆயர் Joseph Aind அவர்கள், நிர்வாகப் பொறுப்பிலிருந்து ஓய்வுப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து, அம்மறைமாவட்டத்தின் வாரிசுரிமை ஆயர் Albert Hemrom அவர்களை, மறைமாவட்ட ஆயராக நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

1945ம் ஆண்டு பிறந்து, சலேசிய சபையில் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டு, Dibrugarh மறைமாவட்ட ஆயராக, கடந்த 25 ஆண்டுகளாக  பணியாற்றிய ஆயர் Joseph Aind அவர்கள், பணி ஒய்வு பெறும் வயதை, கடந்த ஆண்டு நவம்பரில் எட்டியதைத் தொடர்ந்து, அவர் சமர்ப்பித்த ஓய்வு விண்ணப்பத்தை ஏற்று, புதிய ஆயரை நியமித்துள்ளார் திருத்தந்தை.

Dibrugarh மறைமாவட்டத்தின் Konapathar என்ற இடத்தில் 1969ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி  பிறந்த புதிய ஆயர் Albert Hemrom அவர்கள், 1999ம் ஆண்டு அதே மறைமாவட்டத்தின் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டதுடன், 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம், ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டு, அம்மறைமாவட்டத்தின் வாரிசுரிமை ஆயராக பொறுப்பேற்றார்.

15 February 2021, 13:50