தேடுதல்

Vatican News
மொசாம்பிக் ஆயர்கள் சந்திப்பு (09.05.2015) மொசாம்பிக் ஆயர்கள் சந்திப்பு (09.05.2015) 

மனித வாழ்வின் தனித்துவம், சொல், செயல் வழியாக அறிவிக்கப்பட

மனித வாழ்வின் தனித்துவம், சொல், செயல் வழியாக அறிவிக்கப்பட

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இவ்வாண்டு, அக்டோபர் மாதம் 24ம் தேதி சிறப்பிக்கப்படும் 95வது உலக மறைபரப்பு நாளுக்கென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 29, இவ்வெள்ளியன்று வெளியிட்ட செய்தியை மையப்படுத்தி, தன் டுவிட்டர் பக்கத்தில் தன் எண்ணங்களைப் பதிவுசெய்துள்ளார்.

நற்செய்தி அறிவிப்புப்பணியின் வரலாறு, நம் ஆண்டவர், ஒவ்வொருவரையும், அவர்கள் இருப்பதுபோலவே (யோவா.15:12-17) அழைக்கவும், அவர்கள் அனைவரோடும் நட்புணர்வுடன் உரையாடலில் நுழையவும் பேராவல் கொண்டதோடு தொடங்குகிறது என்ற சொற்கள், திருத்தந்தையின் முதல் டுவிட்டர் பதிவில் இடம்பெற்றிருந்தன.

திருத்தந்தையின் இரண்டாவது டுவிட்டர் பதிவில், "வாழ்வுக் கலாச்சாரம், கிறிஸ்தவர்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்ள விரும்பும் பரம்பரைச் சொத்தாகும். ஒவ்வொரு மனித வாழ்வும், தனித்துவமிக்கது மற்றும், திரும்ப வராதது. அது விலைமதிப்பற்றது. அது, சொல் மற்றும், செயல் வழியாக, என்றென்றும், புதுமையோடு துணிவுடன் அறிவிக்கப்படவேண்டியதாகும்" என்ற சொற்கள் வெளியாயின். 

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், 95வது உலக மறைபரப்பு நாள் செய்தியை வலைத்தளத்தில் வாசிப்பதற்கு உதவியாக, அதன் முகவரியும், டுவிட்டர் செய்திகளோடு  இணைக்கப்பட்டுள்ளது.

http://www.vatican.va/content/francesco/en/messages/missions/documents/papa-francesco_20210106_giornata-missionaria2021.html

29 January 2021, 15:23