தேடுதல்

Vatican News
சுவிட்சர்லாந்தில் உலக கிறிஸ்தவ சபைகள் மன்றத்தில் திருத்தந்தை (21/06/2018) சுவிட்சர்லாந்தில் உலக கிறிஸ்தவ சபைகள் மன்றத்தில் திருத்தந்தை (21/06/2018)  (ANSA)

ஆண்டவரில் நிலைத்திருப்பது என்றால்...

என் அன்பில் நிலைத்திருங்கள், மற்றும், நீங்கள் மிகுந்த கனிதரும்பொருட்டு” (யோவா.15:5-9) என்ற தலைப்பில், சனவரி 18 இத்திங்கள் முதல், 25, வருகிற திங்கள் வரை, 54வது கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரம் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சனவரி 18, இத்திங்களன்று தொடங்கியுள்ள கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம், மற்றும், வெனெசுவேலா நாட்டில் பெருந்தொற்று நோயாளர்கள் மத்தியில் பணியாற்றும் அருள்பணியாளர்கள் ஆகிய இரு கருத்துக்களையும் மையப்படுத்தி, சனவரி 19, இச்செவ்வாயன்று இரு டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“நாம் மிகுந்த கனிதரும் பொருட்டு, தம்மில் நிலைத்திருக்குமாறு இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார் (காண்க. யோவா.15:5-9). ஆண்டவரில் நிலைத்திருத்தல் என்பது, நம்மைவிட்டு வெளியேறி, மற்றவரின் தேவைகள் மீது அக்கறை காட்டுவதற்கு துணிவைக் காண்பதாகும், மற்றும், உலகில் கிறிஸ்தவச் சான்று பகர்வதாகும்” என்ற சொற்கள், செபம் (#Prayer), கிறிஸ்தவ ஒன்றிப்பு (#UnityOfChristians) ஆகிய இரு ஹாஸ்டாக்குகளுடன், திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியாக இச்செவ்வாயன்று வெளியானது.  

“என் அன்பில் நிலைத்திருங்கள், மற்றும், நீங்கள் மிகுந்த கனிதரும்பொருட்டு” (யோவா.15:5-9) என்ற தலைப்பில், சனவரி 18 இத்திங்கள் முதல், 25, வருகிற திங்கள் வரை, 54வது கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரம் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

மேலும், "பெருந்தொற்றில் நம் அருள்பணியாளர்கள்" என்ற தலைப்பில் இஸ்பானிய மொழியில் மட்டும் வெளியாகியுள்ள திருத்தந்தையின் இரண்டாவது டுவிட்டர் செய்தியில், “அன்பு சகோதர ஆயர்களே, அருள்பணியாளர்களே, உங்களின் மேய்ப்புப் பணியை மகிழ்வோடும், மனஉறுதியோடும் தொடர்ந்து ஆற்ற உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன், ஆண்டவருக்கும், அவரின் இறைமக்களுக்கும் உங்களையே கொடையாக வழங்குவதைப் புதுப்பித்துக்கொள்ளுங்கள்” என்ற சொற்கள், திருத்தந்தையின் இரண்டாவது டுவிட்டரில் இடம்பெற்றிருந்தன.

19 January 2021, 13:59