தேடுதல்

Vatican News
ஷில்லாங் உயர் மறைமாவட்ட பேராயராக நியமிக்கப்பட்டுள்ள ஆயர் Victor Lyngdoh ஷில்லாங் உயர் மறைமாவட்ட பேராயராக நியமிக்கப்பட்டுள்ள ஆயர் Victor Lyngdoh 

ஷில்லாங் உயர் மறைமாவட்ட பேராயர் நியமனம்

Jowai மறைமாவட்ட ஆயர் Victor Lyngdoh அவர்களை ஷில்லாங் உயர் மறைமாவட்ட பேராயராக நியமித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் ஷில்லாங் உயர் மறைமாவட்ட பேராயராக, Jowai மறைமாவட்ட ஆயர் Victor Lyngdoh அவர்களை, டிசம்பர் 28, இத்திங்களன்று நியமித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஷில்லாங் பேராயராகப் பணியாற்றிவந்த, சலேசிய சபையின் Dominic Jala அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டில் இடம்பெற்ற சாலைவிபத்தில், 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி, தன் 68வது வயதில், இறைபதம் அடைந்ததைத் தொடர்ந்து, தற்போது அவ்வுயர் மறைமாவட்டத்தின் பேராயராக ஆயர் Victor Lyngdoh அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

1956ம் ஆண்டு பிறந்து, ஷில்லாங் மறைமாவட்ட அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்ட Victor Lyngdoh அவர்கள், Nongstoin மறைமாவட்டத்தின் ஆயராக 2006ம் ஆண்டு முதல், 2016ம் ஆண்டு வரையிலும், Jowai மறைமாவட்டத்தின் ஆயராக 2016 முதல் தற்போது வரையும் பணியாற்றியுள்ளார்.

சென்னை மயிலை உயர் மறைமாவட்டத்தின் பேராயராக 1935ம் ஆண்டு முதல் 65 வரை 30 ஆண்டுகள் பணியாற்றிய சலேசிய சபை பேராயர் லூயிஸ் மத்தியாஸ் அவர்கள், ஷில்லாங் மறைமாவட்டத்தின் முதல் ஆயராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷில்லாங் மறைமாவட்டம் உருவாக்கப்பட்டதிலிருந்து, துறவுசபைகளைச் சேர்ந்தவர்களே, ஆயர்களாக நியமிக்கப்பட்டிருக்க, தற்போதுதான் முதன்முறையாக, மறைமாவட்ட அருள்பணியாளர் ஒருவர் அங்கு பேராயராக நியமிக்கப்பட்டுள்ளார்.

28 December 2020, 15:05