தேடுதல்

போலந்து இளையோர் நாள் நிகழ்வில் திருத்தந்தை பிரான்சிஸ் போலந்து இளையோர் நாள் நிகழ்வில் திருத்தந்தை பிரான்சிஸ் 

ஏழைகளோடு புன்னகையைப் பகிர்ந்துகொள்ளுங்கள்

இஞ்ஞாயிறன்று இறைபதம் சேர்ந்த ஈக்குவதோர் நாட்டின் 86 வயது நிரம்பிய கர்தினால் Raúl Eduardo Vela Chiriboga அவர்கள், திருஅவைக்கு ஆற்றியுள்ள நற்பணிகளை, தான் நன்றியுடன் நினைவுகூர்வதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஏழைகளோடு பகிரப்படும் புன்னகைக்கும் பலன் அதிகம் என்பதைக் குறிப்பிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 17, இச்செவ்வாயன்று டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஏழைகளோடு நம்மால் புன்னகையைப் பகிரமுடிந்தால், அது அன்பின் பிறப்பிடமாக அமையும் என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

திருத்தந்தையின் இரங்கல் தந்தி

மேலும், நவம்பர் 15, இஞ்ஞாயிறன்று இறைபதம் சேர்ந்த ஈக்குவதோர் நாட்டின் 86 வயது நிரம்பிய கர்தினால் Raúl Eduardo Vela Chiriboga அவர்களின் ஆன்மா நிறையமைதி அடையத் தான் செபிப்பதாகவும், அவர் திருஅவைக்கு ஆற்றியுள்ள நற்பணிகளை, தான் நன்றியுடன் நினைவுகூர்வதாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

கர்தினால் Vela Chiriboga அவர்களின் மறைவையொட்டி, Quito பேராயர் Alfredo José Espinoza Mateus அவர்களுக்கு இரங்கல் தந்தியை அனுப்பியுள்ள திருத்தந்தை, கர்தினால் Vela Chiriboga அவர்கள், கடவுளுக்கும், திருஅவைக்கும் பல ஆண்டுகளாக ஆற்றியுள்ள நற்பணிகளுக்குத் தான் நன்றிகூறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

1934ம் ஆண்டு சனவரி மாதம் முதல் தேதி ஈக்குவதோர் நாட்டில் பிறந்த கர்தினால் Vela Chiriboga அவர்கள், Quito பேராயராகப் பணியாற்றி, 2010ம் ஆண்டு, பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அதே ஆண்டு நவம்பர் மாதம் அவர் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.

மேலும், நவம்பர் 16, இத்திங்களன்று போலந்து நாட்டின் 97 வயது கர்தினால் Henryk Roman Gulbinowicz அவர்கள் இறைபதம் சேர்ந்ததையடுத்து, திருஅவையில் கர்தினால்களின் எண்ணிக்கை 216 ஆக குறைந்துள்ளது.

17 November 2020, 14:50