தேடுதல்

புனித ஜான் இலாத்தரன் பெருங்கோவில் திருத்தந்தை உரை வழங்குதல் - கோப்புப் படம் புனித ஜான் இலாத்தரன் பெருங்கோவில் திருத்தந்தை உரை வழங்குதல் - கோப்புப் படம் 

புனித ஜான் இலாத்தரன் பெருங்கோவில் அர்ப்பணிப்பு விழா

நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் குடியிருக்க ஆவல் கொண்டுள்ள இறைவனுக்கு, நம்முள் தன் ஆலயத்தை கட்டியெழுப்ப மூன்று நாட்கள் போதும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

உரோம் நகரின் புனித ஜான் இலாத்தரன் பெருங்கோவில் அர்ப்பணிக்கப்பட்டதன் நினைவு நாள் விழா, நவம்பர் 9, இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி, டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித ஜான் இலாத்தரன் பெருங்கோவில் அர்ப்பணிக்கப்பட்டதை நினைவுகூரும் இந்நாளில், இறைவன் நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் குடியிருக்க  கொண்டுள்ள விருப்பத்தை நினைவில் கொள்வோம். நாம் அவரை விட்டு விலகிச்சென்றாலும், நம்முள் தன் ஆலயத்தை கட்டியெழுப்ப இறைவனுக்கு மூன்று நாட்களே தேவை' என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றுள்ளன.

மேலும், இத்தாலிய ஆயர்கள், இஞ்ஞாயிறன்று சிறப்பித்த நீர்வளம் குறித்த தேசிய நாளை முன்னிட்டு, ஒரு டுவிட்டர் செய்தி, ஞாயிறு வாசகத்தையொட்டிய மூவேளை செப உரை குறித்த ஒரு டுவிட்டர் செய்தி, எத்தியோபிப்பியா நாட்டின் அமைதிக்கென ஒரு டுவிட்டர் செய்தி, பெரும் புயலால் பாதிக்கப்பட்ட மத்திய அமெரிக்க மக்களுக்கு இறை ஆறுதலை வேண்டி ஒரு டுவிட்டர் செய்தி என, நான்கு டுவிட்டர் செய்திகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று வெளியிட்டுள்ளார்.

09 November 2020, 14:25