தேடுதல்

APSA APSA  

திருப்பீட செயலகத்தின் நிதி சேமிப்புகள் APSA அமைப்பிடம்

அருளின் அன்னை மரியா பதக்கம் என்ற புகழ்பெற்ற பதக்கத்தின் பக்தி பரவத்தொடங்கியதன் 190ம் ஆண்டை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த பதக்கத்தை, நவம்பர் 11ம் தேதி ஆசிர்வதிப்பார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருப்பீட செயலகத்தின் நிதி சேமிப்புகளை நிர்வாகம் செய்யும் பொறுப்பு, திருப்பீடத்தின் அசையா சொத்துக்களை மேலாண்மை செய்யும், APSA அமைப்பிடம் ஒப்படைக்கப்படுவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தீர்மானித்துள்ளார் என்று திருப்பீட தகவல் தொடர்பகத்தின் இயக்குனர் மத்தேயோ புரூனி அவர்கள், நவம்பர் 05, இவ்வியாழனன்று அறிவித்தார். 

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீட தலைமையகத்தில் மேற்கொண்டுவரும் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளது என்று, புரூனி அவர்கள் மேலும் அறிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி, திருத்தந்தை, திருப்பீடச் செயலருக்கு அனுப்பிய மடலிலும் இது பற்றி குறிப்பிட்டிருந்தார் என்றும், இந்த மாற்றத்தைச் செயல்படுத்த திருத்தந்தை ஒரு குழுவை உருவாக்குகிறார் என்றும், அடுத்த மூன்று மாதங்களுக்குள் இந்த திட்டம் நடைமுறைக்குவரும் என்றும், புரூனி அவர்கள் கூறினார்.

அன்னை மரியா புதுமை பதக்கம்

மேலும், அருளின் அன்னை மரியா பதக்கம் அல்லது, புதுமை பதக்கம் என்ற புகழ்பெற்ற பதக்கத்தின் பக்தி பரவத்தொடங்கியதன் 190ம் ஆண்டை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  அந்த பதக்கத்தை, நவம்பர் 11, வருகிற புதனன்று ஆசிர்வதிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில், புனித Catherine Labouré என்பவருக்கு, 1830ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி  அன்னை மரியா காட்சியில் தோன்றியது போன்று, அந்த புனிதர் அந்த பதக்கத்தை வடிவமைத்தார்.

06 November 2020, 15:38