தேடுதல்

கீழை வழிபாட்டுமுறை தலைவரும் திருத்தந்தையும் கீழை வழிபாட்டுமுறை தலைவரும் திருத்தந்தையும்  

அமைதிக்காக, பல்சமயப் பிரதிநிதிகள் கூட்டம்

"எவரும் தனியாகக் காப்பாற்றப்பட முடியாது, அமைதி மற்றும், உடன்பிறந்த உணர்வு" என்ற தலைப்பில் அக்டோபர் 20ம் தேதி நடைபெறும், பல்சமய வழிபாட்டில் கலந்துகொள்கிறார், திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அக்டோபர் 20, இச்செவ்வாயன்று, "எவரும் தனியாகக் காப்பாற்றப்பட முடியாது, அமைதி மற்றும், உடன்பிறந்த உணர்வு" என்ற தலைப்பில், உரோம் நகரின் Campidoglioவில் நடைபெறும் பல்சமய வழிபாட்டில் கலந்துகொள்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

இது குறித்து செய்தி வெளியிட்ட திருப்பீடத் தகவல் தொடர்பகம், Campidoglio குன்றில் உள்ள Aracoeli மரியன்னை பசிலிக்கா பேராலயத்தில், முதலில் கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் செபவழிபாடு இடம்பெறும் எனவும், அதன்பின்னர், அதே குன்றில் உள்ள Michelangelo வளாகத்தில் அனைத்து சமயப் பிரதிநிதிகளின் கூட்டம் இடம்பெறும் எனவும் அறிவித்துள்ளது.

1986ம் ஆண்டில், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் தலைமையில், இத்தாலி நாட்டின் அசிசியில் நடைபெற்ற, பல்சமய அமைதி வழிபாட்டின் தொடர்ச்சியாக, ஒவ்வோர் ஆண்டும், அமைதிக்காக, பல்சமய வழிபாடு ஒன்றை நடத்திவரும் சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பு, இவ்வாண்டு பல்சமயத் தலைவர்களுடன் இணைந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் கலந்துகொள்வதாக அறிவித்துள்ளது.

சான் எஜிதியோ அமைப்பு நடத்தும் இந்த 34வது பல்சமய செபவழிபாட்டில், கொரோனா அச்சம் காரணமாக,   அனைத்து மத நம்பிக்கையாளர்களும், இணையத் தொடர்புகள் வழி கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடப்பட்டுள்ளது.

19 October 2020, 14:39