தேடுதல்

Vatican News
Sonnenschein மைய அங்கத்தினர்களுடன் திருத்தந்தை Sonnenschein மைய அங்கத்தினர்களுடன் திருத்தந்தை  (Vatican Media)

சுற்றியிருக்கும் அனைவருக்காகவும் இறைவனுக்கு நன்றி

திருத்தந்தை - இறைவனின் தோட்டத்தில் உள்ள மலர்களாகிய நாம், இறைவனின் கண்களுக்கு அழகு நிரம்பியவர்களாக, அன்புக்குரியவர்களாக உள்ளோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

Autism என்றழைக்கப்படும் கற்கும் திறன் குறைபாடுடைய குழந்தைகளைப் பராமரிக்கும் ஆஸ்திரிய மையத்தின் பிரதிநிதிகளை இத்திங்கள் காலை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆஸ்திரியாவின்  "Sonnenschein" மையத்திலிருந்து வந்திருந்த, Autism நோய் பாதித்த குழந்தைகளின் பிரதிநிதிகளை சந்தித்த திருத்தந்தை, இறைவனின் தோட்டத்தில் உள்ள ஒவ்வொரு மலருக்கும் ஒரு தனி அழகு இருப்பதுபோல், நாம் ஒவ்வொருவரும் இறைவனின் கண்களுக்கு அழகு நிரம்பியவர்களாக, அன்புக்குரியவர்களாக உள்ளோம், என்று கூறினார்.

இறைவனுக்கும், பெற்றோருக்கும், நண்பர்களுக்கும் நன்றி சொல்லவேண்டிய ஒவ்வொருவரின் கடமையையும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவனுக்கு நன்றியுரைப்பது, ஒரு சிறந்த செபமாக இருக்கமுடியும் என்பதையும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்கள் பெற்றோருக்காக, நோயுற்றிருக்கும் தாத்தா பாட்டிகளுக்காக, உணவின்றி உலகில் தவிக்கும் குழந்தைகளுக்காக, திருத்தந்தைக்காக செபிப்பது ஆகியவற்றை நினைவுறுத்தி, சின்னஞ்சிறியோரின் குரலுக்கு இறைவன் செவிசாய்க்கத் தவறமாட்டார் என்று கூறினார்.

21 September 2020, 14:11