தேடுதல்

Vatican News
மூவேளை செபவுரையின்போது வத்திக்கான் புனித பேதுரு சதுக்கம் - 160820 மூவேளை செபவுரையின்போது வத்திக்கான் புனித பேதுரு சதுக்கம் - 160820  (ANSA)

வாழ்வின் கனிகளைக் கொணர்வது செல்வம் அல்ல

கண்ணீர் மற்றும், துயர்களால் குறியிடப்பட்டிருக்கும் நம் வாழ்வோடு, நம் ஏழ்மையையும் இறைவன் முன் வைக்கும்போது, இறைவன் அச்செபத்தை ஏற்கிறார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

வாழ்வின் கனிகளைக் கொணர்பவர்கள் செல்வந்தர்கள் அல்ல, மாறாக, நட்புணர்வைக் கட்டியெழுப்புபவர்களே என, இத்திங்களன்று, தன் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வாழ்வின் கனிகளைக் கொணர்பவர்கள், செல்வந்தர்கள் அல்ல, மாறாக, செல்வங்களை, அதாவது, இறைவன் வழங்கிய பல்வேறு கொடைகளைக் கொண்டு நட்பைக் கட்டியெழுப்பி, அதனைத்தொடர்ந்து வைத்திருப்பவர்களே, வாழ்வின் கனிகளைக் கொணர்கின்றனர், என்ற சொற்கள், ஆகஸ்ட் 17ம் தேதி, திங்களன்று, திருத்தந்தை வழங்கியுள்ள டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றுள்ளன.

மேலும், ஆகஸ்ட் 16ம் தேதி, இஞ்ஞாயிறன்று வழங்கிய நண்பகல் மூவேளை செப உரையை மையமாக வைத்து டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கண்ணீர் மற்றும், துயர்களால் குறியிடப்பட்டிருக்கும் நம் வாழ்வோடு, நம் ஏழ்மையையும் இறைவன் முன் வைக்கும்போது, கானானேயப் பெண்ணை ஒத்த உறுதியான விசுவாசத்தையும்  (மத் 15:21-28) கொண்டிருந்தால், இறைவன் தன் தந்தைக்குரிய கண்களுடனும், இதயத்துடனும் அந்த செபத்தை வரவேற்காமல் இருக்க இயலாது, என அதில் எழுதியுள்ளார்.

17 August 2020, 14:14