தேடுதல்

லெபனானில் விபத்துக்குள்ளான பகுதி லெபனானில் விபத்துக்குள்ளான பகுதி 

லெபனான் நாட்டிற்கு திருத்தந்தையின் இரங்கல் செய்தி

லெபனான் நாடு, சமூக, அரசியல் மற்றும் மத அமைப்புக்களின் துணைகொண்டு, இந்த துன்பகரமான நேரத்தை எதிர்கொள்வதாக - திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

ஆகஸ்ட் 04, இச்செவ்வாயன்று, லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டின் துறைமுகப் பகுதியில் இடம்பெற்ற வெடிகுண்டு விபத்துக்களால் மக்கள் பெரும் எண்ணிக்கையில் உயிரிழந்துள்ளது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தன் புதன் மறைக்கல்வியுரைக்குப்பின், இந்த தாக்குதல் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த வெடிகுண்டு விபத்துக்களில் உயிரிழந்தோர், காயமடைந்தோர், மற்றும், அவர்களின் குடும்பங்களுக்காக செபிப்பதோடு, லெபனான் நாட்டுக்காகவும் செபிப்போம் என்று கூறினார்.

லெபனான் நாடு, சமூக, அரசியல் மற்றும் மத அமைப்புக்களின் துணைகொண்டு, இந்த துன்பகரமான நேரத்தை எதிர்கொள்வதுடன், அனைத்துலக சமுதாயத்தின் உதவியுடன், இந்தக் கடுமையான நெருக்கடிகளை வெற்றிகொள்ளட்டும் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

ஆகஸ்ட் 4, இச்செவ்வாய்க்கிழமை, பெய்ரூட்டின் துறைமுகப்பகுதியில் இடம்பெற்ற வெடிகுண்டு விபத்துக்களில், நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஏறத்தாழ நான்காயிரம் பேர் காயமடைந்துள்ளனர். நான்கு மருத்துவமனைகள் உட்பட பல கட்டடங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன என்று செய்திகள் கூறுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 August 2020, 13:32