தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் Campanha de Marabá மருத்துவமனைக்கு  சுவாசிக்கும் கருவி ஒன்றை வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் Campanha de Marabá மருத்துவமனைக்கு சுவாசிக்கும் கருவி ஒன்றை வழங்கியுள்ளார் 

பழங்குடியினருக்கென திருத்தந்தை வழங்கிய சுவாசக் கருவி

அரசாலும் ஏனைய நிறுவனங்களாலும் ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள பழங்குடியினர் மீது திருத்தந்தை காட்டிவரும் அக்கறை போற்றுதற்குரியது - Marabá ஆயர், Corbellini

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரேசில் நாட்டில் உள்ள Campanha de Marabá என்ற மருத்துவமனைக்கு சுவாசிக்கும் கருவியொன்றை தானமாக வழங்கியுள்ளார்.

பிரேசில் நாட்டிலுள்ள திருப்பீடத் தூதரகத்தின் வழியே, திருத்தந்தை அனுப்பியுள்ள இந்தப் பரிசு, அதிகத் தேவையில் இருக்கும் பழங்குடியினருக்கென குறிப்பாக பயன்படுத்தப்படவேண்டும் என்ற வேண்டுகோளுடன் அனுப்பப்பட்டுள்ளது என்று Marabá ஆயர், Vital Corbellini அவர்கள் கூறியுள்ளார்.

திருத்தந்தை அனுப்பியிருந்த இந்த சுவாசக்கருவியும், வெப்பத்தை அளவிடும் ஒரு கருவியும், Campanha de Marabá என்ற மருத்துவமனையின் கோவிட்-19 சிறப்புப் பிரிவுக்கு ஜூலை 13, இத்திங்களன்று வழங்கப்பட்டது. இந்தப் பிரிவில், பழங்குடியினருக்கென்று 10 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அரசாலும் ஏனைய நிறுவனங்களாலும் ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள பழங்குடியினர் மீது திருத்தந்தை காட்டிவரும் அக்கறை போற்றுதற்குரியது என்றும், திருத்தந்தையும், தலத்திருஅவையும் வழங்கும் ஆதரவால், பிரேசில் நாட்டிலுள்ள பழங்குடியினர் ஓரளவு பாதுகாப்பு அடைந்து வருகின்றனர் என்றும், Marabá ஆயர், Corbellini அவர்கள் கூறினார்

15 July 2020, 14:58