தேடுதல்

Vatican News
கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் புதிய துணை ஆயர் - அருள்பணி அன்டன் இரஞ்சித் பிள்ளைநாயகம் கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் புதிய துணை ஆயர் - அருள்பணி அன்டன் இரஞ்சித் பிள்ளைநாயகம் 

கொழும்பு உயர்மறைமாவட்டத்திற்கு புதிய துணை ஆயர்

யாழ்ப்பாணத்தில் பிறந்த அருள்பணி பிள்ளைநாயகம் அவர்கள், கொழும்புவின் புதிய துணை ஆயர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

இலங்கையின் கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராக, அதே மறைமாவட்டத்தைச் சேர்ந்த, அருள்பணி அன்டன் இரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்களை, ஜூலை 13, இத்திங்களன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கொழும்பு புனித யோசேப்பு கல்லூரியின் துணை அதிபராகவும், தமிழ் மெய்யியல் துறையின் தலைவராகவும் இதுவரை பணியாற்றிவந்துள்ள அருள்பணி பிள்ளைநாயகம் அவர்கள், யாழ்ப்பாணத்தில் 1966ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி பிறந்தவர்.

கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் புதிய துணை ஆயராக அறிவிக்கப்பட்டுள்ள அருள்பணி பிள்ளைநாயகம் அவர்கள், 2000மாம் ஆண்டு செப்டம்பர் மாதம், கொழும்பு உயர் மறைவட்டத்தின் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

இங்கிலாந்தில், கல்வியியலிலும், யாழ்ப்பாணத்தில் மெய்யியலும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றுள்ள புதிய ஆயர், கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் கத்தோலிக்க கல்லூரிகளில் பல உயர் பொறுப்புக்களில் பணியாற்றியுள்ளார்.

13 July 2020, 13:45