தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை பிரான்சிஸ்.   (Vatican Media)

எல்லா இடங்களிலும் கடவுளை பார்ப்பவர் யார்?

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 26 இவ்வெள்ளியன்று, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்களையும், சான் எஜீதியோ பிறரன்பு அமைப்பை நிறுவிய, பேராசிரியர் Andrea Riccardi அவர்களையும் வத்திக்கானில் தனித்தனியே சந்தித்தார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இயேசுவின் தூய்மைமிகு இதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஜூன் மாதத்தில், அதிலும் குறிப்பாக, இயேசுவின் திருஇதய பக்திமுயற்சி சிறப்பாக கடைப்பிடிக்கப்படும் வெள்ளிக்கிழமையன்று, இயேசுவின் திருஇதயத்தின் மகத்துவத்தை மையப்படுத்தி, ஜூன் 26, இவ்வெள்ளியன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“எவற்றையும் இதயத்திலிருந்து நோக்குகிறவர்கள் மட்டுமே, அவற்றை நன்றாகப் பார்க்கின்றனர், ஏனெனில், அத்தகையோர், ஒவ்வொரு மனிதரின் தவறுகள், நம்பிக்கை மற்றும், இன்னல்கள் ஆகிய அனைத்தையும் கடந்து, அவர்களை சகோதரர் அல்லது சகோதரியாகப் பார்ப்பதற்கு அறிந்திருக்கின்றனர், அத்தகைய மனிதர்கள், கடவுளை எல்லா இடங்களிலும் பார்க்கின்றனர்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 26 இவ்வெள்ளியன்று, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்களையும், சான் எஜீதியோ பிறரன்பு அமைப்பை நிறுவிய, பேராசிரியர் Andrea Riccardi அவர்களையும் வத்திக்கானில் தனித்தனியே சந்தித்தார்.

26 June 2020, 14:23