தேடுதல்

Vatican News
புலம்பெயர்ந்தோருடன் திருத்தந்தை பிரான்சிஸ் புலம்பெயர்ந்தோருடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

எவரையும் ஒருபோதும் எதிரியாக நோக்காமல் இருக்க...

பெனின் மற்றும், டோகோ நாடுகளுக்குத் திருப்பீட தூதராகப் பணியாற்றிய பேராயர் Brian UDAIGWE அவர்களை, இலங்கைக்கு திருப்பீடத் தூதராக, ஜூன் 13, இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஜூன் 13, இச்சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நான்காவது வறியோர் உலக நாள் செய்தியை மையப்படுத்தி, அவரின் இரு டுவிட்டர் செய்திகள் பதிவாகியிருந்தன.

“ஏழைகளுக்கு உன் கரத்தை தாராளமாய் நீட்டு” (சீராக் 6:7). இந்த பழங்கால ஞானம், வாழ்வில் பின்பற்றவேண்டிய புனித விதிமுறையாக, இந்த வார்த்தைகளைப் பரிந்துரைக்கின்றது என்ற சொற்களுடன் வெளியாகியுள்ள திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியோடு, நான்காவது வறியோர் உலக நாள் செய்தியை இணையத்தில் வாசிப்பதற்கு உதவியாக முகவரிகளும் இணைத்து கொடுக்கப்பட்டுள்ளது. http://w2.vatican.va/content/francesco/en/messages/poveri/documents/papa-francesco_20200613_messaggio-iv-giornatamondiale-poveri-2020.html.    

திருத்தந்தையின் 2வது டுவிட்டர் செய்தியில், “அனைவரையும், சகோதரர், சகோதரியாக அணுகுவதற்கும், எவரையும் ஒருபோதும் எதிரியாக நோக்காமல் இருப்பதற்கும், இறையருளை வேண்டுவோம்” என்ற சொற்கள் பதிவாகியுள்ளன.

இலங்கை திருப்பீடத் தூதர்

இன்னும், பெனின் மற்றும், டோகோ நாடுகளுக்குத் திருப்பீட தூதராகப் பணியாற்றிய பேராயர் Brian UDAIGWE அவர்களை, இலங்கைக்கு திருப்பீடத் தூதராக, ஜூன் 13, இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 13, இச்சனிக்கிழமை காலையில், வத்திக்கானில் அமைந்துள்ள சாந்தா மார்த்தா இல்லத்தில், ஆயர்கள் பேராயத்தின் தலைவர் கர்தினால் Mare Ouellet அவர்களையும், மாஃபியா மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான இத்தாலியின் தேசிய அமைப்பின் தலைவர் Federico Cafiero de Raho அவர்களையும், லொசர்வாத்தோரே ரொமானொ தினத்தாளின் Andrea Monda அவர்களையும், தனித்தனியே சந்தித்து கலந்துரையாடினார்.

13 June 2020, 15:45