தேடுதல்

Vatican News
உரோம் நகரின் புனித பேதுரு பேராலயத்தில் அவரின் திரு உருவம் உரோம் நகரின் புனித பேதுரு பேராலயத்தில் அவரின் திரு உருவம்   (Vatican Media)

இறைவனின் நன்றியுணர்வு, சிறு உதவிகளையும் கணக்கில் எடுக்கிறது

நாம் ஒவ்வொருவரும், திருஅவை புதுப்பித்தலையும், மனிதகுல புதுப்பித்தலையும், கட்டியெழுப்பும், வாழும் மனிதர்களாக விளங்க நம்மை அழைக்கிறார் இறைவன்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்
ஜூன் 29ம் தேதி, இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்ட புனித பேதுரு, மற்றும் பவுலின் திருவிழாவையொட்டி தான் வழங்கிய மறையுரையின் கருத்துக்களை மையமாக வைத்து இரு டுவிட்டர் செய்திகளை இந்நாளில் வழங்கியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
புனிதர்கள் பேதுரு மற்றும் பவுலின் விழாவாகிய இந்நாளில், ஒன்றிப்பு, மற்றும், இறைவாக்கு குறித்து சிந்தனைகளைப் பகிர்ந்திட விரும்புகிறேன், நாம் ஒன்றிப்பை கட்டியெழுப்புபவர்களாக செயல்பட விருப்பமா, இவ்வுலகில் இறையரசின் இறைவாக்குரைப்பவர்களாக செயல்பட ஆவலா, என இயேசு நம்மிடம் கேட்கும்போது, ஆம் என பதில் சொல்லும் மனவுறுதியை பெறுவோம், என தன் முதல் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்திங்களன்று வெளியிட்ட இரண்டாவது டுவிட்டரில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சீமோனை பேதுருவாக மாற்றிய இறைவன், நாம் ஒவ்வொருவரும், திருஅவை புதுப்பித்தலையும், மனிதகுல புதுப்பித்தலையும், கட்டியெழுப்பும், வாழும் மனிதர்களாக விளங்க நம்மை அழைக்கிறார், என கூறியுள்ளார்.
மேலும், ஞாயிறன்று, மூன்று டுவிட்டர் செய்திகளை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏமன் நாட்டில் மனிதகுல நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, குறிப்பாக குழந்தைகளுக்காகவும், மேற்கு உக்ரைனில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் செபிப்போம் என தன் ஞாயிறு முதல் டுவிட்டரில் விண்ணப்பித்துள்ளார்.
நாம் நம் சகோதர சகோதரிகளுக்கு ஆற்றிய சிறு சேவையும், காட்டிய அன்பும் மிகச் சிறியதெனினும், இறைவனின் தாராள நன்றியுணர்வு அவற்றை கணக்கில் எடுக்கிறது என, தன் இரண்டாவது டுவிட்டரில் கூறும் திருத்தந்தை, நம் அருகிலேயே இருக்கும் இயேசுவின் சிலுவையை சுமந்து செல்லாமல் உண்மையான அன்பை நாம் கொண்டிருப்பதாக கூறமுடியாது என கூறியுள்ளார்.
 

29 June 2020, 14:01