தேடுதல்

Vatican News
புனித சியென்னா காத்ரீன் புனித சியென்னா காத்ரீன்  

புனித சியென்னா காத்ரீன் இன்று உதவுவாராக

ஐரோப்பாவின் பாதுகாவலராகிய புனித சியென்னா காத்ரீன், ஒன்றிப்பில் நீடித்து நிலைத்திருக்க, ஐரோப்பாவிற்கு உதவுவாராக

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் புதன் மறைக்கல்வியுரையின் இறுதியில், இப்புதனன்று திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட, இத்தாலியின் இணைப் பாதுகாவலர் புனித சியென்னா காத்ரீன் விழா குறித்து எடுத்தியம்பினார். இயேசுவுடன் கொண்டிருந்த ஒன்றிப்பில் தன் மன உறுதியையும், அணைந்து போகாத நம்பிக்கையையும் பெற்றிருந்த இந்த புனிதர், அனைத்தும் இழக்கப்பட்டுவிட்டதாக தோன்றிய காலத்திலும், தன் விசுவாசத்தில் உறுதியுடன் மற்றவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருந்தார். நாம் இயேசுவுடன் எவ்வாறு ஒன்றித்திருக்க வேண்டும் என்பதற்கும், திருஅவை மீது எவ்வாறு அன்புகூரவேண்டும் என்பதற்கும், பொதுமக்கள் சமுதாயத்துடன் பலன்தரும் அக்கறையுடன் செயல்படவேண்டும் என்பதற்கும், இன்றைய துன்பகர வேளையில் இப்புனிதரின் எடுத்துக்காட்டு நமக்கு உதவுவதாக. இந்த கொரோனா கொள்ளை நோய் காலத்தில், இத்தாலியையும், ஐரோப்பாவையும் பாதுகாக்கும்படி இந்த புனிதையிடம் நான் இறைஞ்சுகிறேன். ஐரோப்பாவின் பாதுகாவலராகிய இவர், ஒன்றிப்பில் நீடித்து நிலைத்திருக்க, ஐரோப்பாவிற்கு உதவுவாராக என்று, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோர், முதியோர், புதுமணத்தம்பதியர் என அனைவரையும் இவ்வேளையில் நினைவுகூர்வதாக உரைத்து, உயிர்த்த இயேசுவின் சான்றுகளாகச் செயல்படுங்கள் என அழைப்பு விடுத்தார்

29 April 2020, 13:46