தேடுதல்

Vatican News
பெருங்கோவிலின் மத்திய பீடத்திற்குப் பின்புறம் புதிய நெருப்பை ஆசீர்வதித்த திருத்தந்தை. பெருங்கோவிலின் மத்திய பீடத்திற்குப் பின்புறம் புதிய நெருப்பை ஆசீர்வதித்த திருத்தந்தை.  (Vatican Media)

திருத்தந்தையின் பாஸ்கா திருவிழிப்பு திருவழிபாடு

வானவர் புகழ் பாடல் இசைக்கப்பட்டபோது, புனித பேதுரு பெருங்கோவிலின் மணிகள் ஒலிக்க, இவ்வழிபாட்டில் கலந்துகொண்ட ஒருசில அருள்பணியாளர்கள் மற்றும், விசுவாசிகள், தங்கள் கரங்களிலிருந்த மெழுகுதிரிகளை ஏற்றிக்கொண்டனர்.

மேரி தெரேசா : வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 11, புனித சனிக்கிழமை, உரோம் நேரம், இரவு ஒன்பது மணிக்கு, அதாவது, இந்திய-இலங்கை நேரம் நள்ளிரவு 12.30 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில், திருவிழிப்புக்களுக்கெல்லாம் திருவிழிப்பாகிய, புனித இரவின் பாஸ்கா திருவிழிப்பு திருவழிபாட்டைத் துவக்கினார். கொரோனா தொற்றுக்கிருமி பரவல் நிலையால், இவ்வழிபாட்டில் இடம்பெற வேண்டிய சில நிகழ்வுகள் இடம்பெறவில்லை.

பெருங்கோவிலின் மத்திய பீடத்திற்குப் பின்புறம் புதிய நெருப்பு ஆசீர்வதிக்கப்பட்டது. ஒளி வழிபாடு  வழக்கம்போல் இடம்பெறவில்லை. வானவர் புகழ் பாடல் இசைக்கப்பட்டபோது, புனித பேதுரு பெருங்கோவிலின் மணிகள் ஒலிக்க, இவ்வழிபாட்டில் கலந்துகொண்ட ஒருசில அருள்பணியாளர்கள் மற்றும், விசுவாசிகள், தங்கள் கரங்களிலிருந்த மெழுகுதிரிகளை ஏற்றிக்கொண்டனர். மேலும், திருமுழுக்கு அருளடையாளம் வழங்கும் நிகழ்வும் இடம்பெறவில்லை. ஆனால், திருமுழுக்கு வாக்குறுதிகள் புதுப்பிக்கப்பட்டன. இவ்வழிபாட்டில், புனித மர்ச்செல்லோ ஆலயத்தின் புதுமை திருச்சிலுவையும், உரோம் மேரி மேஜர் பெருங்கோவிலிலுள்ள Salus Populi Romani அன்னை மரியா திருப்படமும் வைக்கப்பட்டிருந்தன.

12 April 2020, 13:02