தேடுதல்

Vatican News
அன்னை மரியாவிடம் செபிக்கும் திருத்தந்தை அன்னை மரியாவிடம் செபிக்கும் திருத்தந்தை 

திருத்தந்தையின் மால்ட்டா திருத்தூதுப் பயணம் தள்ளிவைப்பு

கொரோனா தொறுநோயால் வேலை செய்ய முடியாமல், பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் மக்களுக்காக செபிப்போம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கொரோனா பாதிப்பினால் பொருளாதார நெருக்கடிகளைச் சந்திக்கும் குடும்பங்களுக்காக செபிப்போம் என, தன் இத்திங்கள் டுவிட்டர் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கொரோனா தொறுநோயால் வேலை செய்ய முடியாமல், பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் மக்களுக்காக செபிப்போம். இந்நிலையில், குடும்பங்களை பாதிக்கின்றன, என PrayTogether என்ற ஹாஷ்டாக்குடன் தன் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை.

மால்ட்டா திருத்தூதுப் பயணம்

இதற்கிடையே, உலகில் இன்று கொரோனா தொற்றுநோய் தன் ஆதிக்கத்தைக் கொண்டிருக்கும் நிலையில், திருத்தந்தையின் மால்ட்டா நாட்டிற்கான திருத்தூதுப் பயணம் தற்போதைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக திருப்பீட தகவல் தொடர்பகம் அறிவித்தது.

மால்ட்டா அரசு அதிகாரிகளோடும், தலத்திருஅவை அதிகாரிகளோடும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்குப்பின், இந்த திருத்தூதுப் பயணத் திட்டங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் 31ம் தேதி, பெந்தகொஸ்தே ஞாயிறன்று மால்ட்டா நாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு நாள் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார் என திருப்பீடம் ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது கொரோனா தொற்று நோய் அச்சுறுத்தலின் காரணமாக, இத்திருப்பயணம் மறு தேதி அறிவிப்பின்றி தள்ளிபோடப்பட்டுள்ளது.

23 March 2020, 15:41