தேடுதல்

Vatican News
ஆயர் சிங்கராயர், சேலம் மறைமாவட்டம் ஆயர் சிங்கராயர், சேலம் மறைமாவட்டம் 

சேலம் ஆயர் ஓய்வுப் பெறுவதற்கென அளித்த விண்ணப்பம் ஏற்பு

வரும் மாதம் தன் 68வது வயதைத் துவக்கும் ஆயர் சிங்கராயன் அவர்கள், 2000மாம் ஆண்டில், சேலம் மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

சேலம் மறைமாவட்ட நிர்வாகப் பொறுப்புகளிலிருந்து ஓய்வுப் பெறுவதற்கென அம்மறைமாவட்ட ஆயர் Singaroyan அவர்கள் வெளியிட்டிருந்த விண்ணப்ப மனுவை திருத்தந்தை ஏற்றுள்ளதாக இத்திங்களன்று திருப்பீடம் அறிவித்தது.

1952ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 13ம் தேதி பிறந்த, ஆயர் சிங்கராயன் செபஸ்தியானப்பன் அவர்கள், நிர்வாகப் பொறுப்பிலிருந்து ஓய்வு பெறுவதற்கான விருப்பத்தை ஏற்கனவே சமர்ப்பித்திருந்த நிலையில், இத்திங்கள் காலையில் அதனை ஏற்றுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வரும் மாதம் தன் 68வது வயதைத் துவக்கும் ஆயர் சிங்கராயன் அவர்கள், 1978ம் ஆண்டு அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டு, 2000மாம் ஆண்டில், சேலம் மறைமாவட்ட ஆயராக, திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பவுல் அவர்களால் நியமிக்கப்பட்டார்.

09 March 2020, 16:09