தேடுதல்

Vatican News
திருஅவை சட்டங்களுக்கு விளக்கமளிக்கும் திருத்தந்தை பணிக்குழு திருஅவை சட்டங்களுக்கு விளக்கமளிக்கும் திருத்தந்தை பணிக்குழு  (Vatican Media)

சட்டத்தின் உண்மையான பொருள் கண்டுணரப்பட...

திருஅவை சட்டங்களுக்கு விளக்கமளிக்கும் திருத்தந்தை பணிக்குழுவின் உறுப்பினர்களைச் சந்தித்து, திருஅவை சட்டத்தின் மேய்ப்புப்பணி இயல்பை வலியுறுத்திப் பேசினார், திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருஅவையின் சட்டங்களுக்கு விளக்கமளிக்கும் திருத்தந்தை பணிக்குழு, திருஅவையில் சட்டம் தொடர்பான தனது பணிக்கும், மற்ற துறைகளுக்கும் ஆற்றிவரும் பணிகளுக்கு நன்றி தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவையின் சட்டங்களுக்கு விளக்கமளிக்கும் திருத்தந்தை பணிக்குழு நடத்திய ஆண்டு நிறையமர்வு கூட்டத்தில் பங்குகொண்ட ஏறத்தாழ முப்பது உறுப்பினர்களை,  பிப்ரவரி 21, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து, உரையாற்றிய திருத்தந்தை, திருஅவை சட்டத்தின் மேய்ப்புப்பணி இயல்பு பற்றிப் பேசினார்.

திருஅவையில் சட்டத்தின் உண்மையான அர்த்தம்

இப்பணிக்குழு, திருஅவை சட்டத்திற்குச் சரியான விளக்கமளிக்கவும், அதைச் செயல்படுத்தவும் ஆயர்களுக்கும், ஆயர் பேரவைகளுக்கும் உதவிகளை ஆற்றி வருகிறது என்றும், பொதுவாக, சட்டம் பற்றிய அறிவையும், அது பற்றிய விழிப்புணர்வையும் உருவாக்கி வருகிறது என்றும், திருத்தந்தை கூறினார்.

கடவுளின் வார்த்தையும், அருளடையாளங்களும் மிக மேலானதாகவுள்ள கிறிஸ்துவின் மறையுடலாம் திருஅவையில், சட்டத்தின் உண்மையான பொருள் கண்டுணரப்பட வேண்டியதும், ஆழப்படுத்தப்பட வேண்டியதும் இன்றியமையாதது என்றுரைத்த திருத்தந்தை, திருஅவை சட்டத்தின் மேய்ப்புப்பணி இயல்பை மக்கள் புரிந்துகொள்ளச் செய்வது முக்கியம் என்பதையும் வலியுறுத்திக் கூறினார்.

இறைமக்கள் மத்தியில் ஒன்றிப்பு

திருஅவையின் தண்டனை சட்டத்தைப் பொறுத்தவரை, ஆயர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட விசுவாசிகள் மத்தியில் நீதிபதிகளாக உள்ளனர் என்பதை அவர்கள் உணர வேண்டும், நீதிபதிகளாக உள்ள ஆயர்கள், இறைமக்கள் மத்தியில் ஒன்றிப்பு வளர உழைக்க வேண்டும் என்று திருத்தந்தை கூறினார்.

1984ம் ஆண்டில் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், திருஅவையின் சட்டங்களுக்கு விளக்கமளிக்கும் திருத்தந்தை பணிக்குழுவை உருவாக்கினார்.

21 February 2020, 15:18