கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
மால்ட்டா நாட்டின் அரசு, மற்றும், திருஅவைத் தலைவர்கள் விடுத்துள்ள அழைப்பின்பேரில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு, மே மாத இறுதியில், அந்நாட்டில், திருத்தூதுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
மே மாதம் 31ம் தேதி இடம்பெற உள்ள இத்திருத்தூதுப் பயணம் குறித்து, இத்திங்களன்று செய்தி வெளியிட்ட திருப்பீடத் தகவல் தொடர்புத் துறை, மால்ட்டா, மற்றும், கோசோ தீவுகளில் இடம்பெற உள்ள இப்பயணம் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.
வரும் மே மாத இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மால்ட்டாவில் மேற்கொள்ளவிருக்கும் இத்திருத்தூதுப்பயணம், திருத்தந்தை ஒருவர், அந்நாட்டில் மேற்கொள்ளும் நான்காவது திருத்தூதுப்பயணமாகும்.
புனிதத் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், 1990, மற்றும், 2001 ஆகிய இரு ஆண்டுகளிலும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2010ம் ஆண்டிலும் மால்ட்டாவில் திருப்பயணங்களை மேற்கொண்டனர்.