தேடுதல்

மூவேளை செப உரையின்போது திருப்பயணிகள் - 050120 மூவேளை செப உரையின்போது திருப்பயணிகள் - 050120 

போர், மரணத்தையும் அழிவையுமே கொணர்கிறது - திருத்தந்தை

ஈரானுக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இடையே பதட்ட நிலைகள் அதிகரித்துள்ள இன்றையச் சூழலில், பகைமையை விலக்கி, பேச்சுவார்த்தைகள் எனும் சுடரை அணையாமல் வைத்திருக்குமாறு, திருத்தந்தை அழைப்புவிடுத்தார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஈரானுக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இடையே பதட்ட நிலைகள் அதிகரித்துள்ள இன்றையச் சூழலில், சனவரி 5, இஞ்ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மூவேளை செப உரையில்,  பகைமையை விலக்கி, பேச்சுவார்த்தைகள் எனும் சுடரை அணையாமல் வைத்திருக்குமாறு, அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்புவிடுத்தார்.

எந்த ஒரு நாட்டையும் குறிப்பிட்டுப் பேசாமல், இன்றைய உலகில் அமைதியின் தேவை குறித்து, தன் மூவேளை செப உரையின் இறுதியில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகின் பல பகுதிகளில் அழிவின் காற்று வீசிக்கொண்டிருக்கும் இக்காலத்தில், பேச்சுவார்த்தைகளின் சுடரை ஊக்கமூட்டி, சுயக்கட்டுப்பாட்டை வளர்த்து, பகைமையின் நிழலை ஒதுக்கித் தள்ளவேண்டும், என அழைப்பு விடுத்தார்.

போர் என்பது, மரணத்தையும் அழிவையுமே கொணர்கிறது என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

அமைதி எனும் அருளைப்பெற நாம் அனைவரும் ஒன்றிணைந்து செபிப்போம் என வத்திக்கான் புனித பேதுருப் பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த அனைவருக்கும் அழைப்புவிடுத்து, தன் மூவேளை செப உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 January 2020, 15:29